உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக் காட்டுகிறது. செவ்வியல் படைப்பான இந்த நூல் ஓர் அசல் சுயவுதவிப் பெட்டகம். இது உலகெங்கும் எண்ணிக்கையற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளாற்றலை வழங்கிக்கொண்டிருக்கிறது. அன்பு எவ்வாறு மனிதனுக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி, வாழ்க்கையின் மிகக் குதூகலமான அனுபவமாக அது ஆக முடியும் என்பதை நீங்களும் இந்த நூலிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடனே இருக்கவேண்டிய புதிய வெளிச்சமூட்டும் இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற உளப் பகுப்பாய்வாளர் எரிக் ஃபிராம், நம்மிடமிருக்கும் நமது நேசிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வழிகாட்டுகிறார். பொய்யான கருத்துநிலைகளிலும் மிகை எதிர்பார்ப்பிலும் ஊறியிருக்கும் காதல் அன்பு, பெற்றோர்-பிள்ளைகள் அன்பு, சகோதர அன்பு, காமிய அன்பு, சுயம் சார்ந்த அன்பு, கடவுள்மீது அன்பு போன்ற அன்பின் அனைத்து அம்சங்களிலும் நமது ஆற்றலை வளர்ப்பது பற்றி விவரிக்கிறார். மேலும் நம்முடைய வாழ்க்கையின் ஒட்டு மொத்தமான போக்கை நாம் எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். ‘அன்பு என்னும் கலை’ 1956 முதல் தொடர்ந்து பதிப்பிக்கப்படுகிறது. இதுவரை ஆங்கிலத்தில் 60 லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இதன்மூலம் இந்த நூல், தனிப்பட்ட ஆளுமையின் வளர்ச்சி உளவியலை வளர்த்தெடுக்கின்ற ஒரு முன்னோடிப் படைப்பாகக் கருதப்படுகிறது.
No product review yet. Be the first to review this product.