கதையும் புனைவும் : புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்
பா. வெங்கடேசன்
நேர்காணல்: த. ராஜன்
புத்தகத்தின் தலைப்பைத் தாண்டியும் புனைவாக்கம் தொடர்பான பல விஷயங்களைப் பேசுகிறது. வெறும் உத்திகளாக மட்டுமே பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த பல புனைவாக்கக் கூறுகளையும் பரிசோதனை மாதிரிகளையும் புனைவு வரலாற்றோடும் சமகால சமூக இயக்கத்தோடும் பொருந்திப் புரிந்துகொள்ள வேண்டுகிறது.முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக புதிய கோட்பாடுப் பார்வைகள் வற்புறுத்திவரும் பிரதி வாசிப்பு முறைகளை இதுகாறும் புரிந்துகொள்ளப்பட்ட விதத்திலிருந்து வேறுபட்ட விதத்தில் அல்லது சற்றே முன்னேற்றப்பட்ட விதத்தில் சொல்லிப்பார்க்கிறது. குறிப்பிடத்தக்க முக்கியமான புனைவுகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் ஆசிரியரின் விரிவான புனைவாக்க அனுபவம் இதற்கான அடிப்படைத் தகுதி ஆகிறது.
No product review yet. Be the first to review this product.