ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை. உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும், ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டும்மல்ல, அவர் இலக்கியத்திற்கு அப்பால் அரசியலிலும் ஈடுபட்டது மாதிரி நாவல், சிறுகதைகளைத் தவிர கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றையும் தமிழுக்குத் தந்திருக்கிறார். நாடோடிக் கதைகளைத் திரட்டித் தொகுத்திருக்கிறார். கயத்தாறு சந்தன ஆசாரி என்பவருடன் சேர்ந்து, மாடுகள் இழுக்கும் பாரவண்டியை இலகுவாக மாற்றி அமைப்பதற்கும் யோசனை தந்து உதவியிருக்கிறார். சமூகத்தின் மீது தீவிரமான அக்கறையும், அன்பும் கொண்ட ஒரு மனிதரின் பெயர்தான் கி.ராஜநாராயணன் என்ற ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் ராமாநுஜன். - வண்ணநிலவன்