விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறையில் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு. குறிப்பாக குழந்தை வளர்ப்பை நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் சக்தி பகதூர். குறைவான பக்கங்களே கொண்டிருந்தாலும் வரிக்குவரி அடர்த்தியான செய்திகளை உள்ளடக்கிய வகையில் கனமான நூல் இது. பேச்சு மொழியையே எழுத்து மொழியாக மாற்றி இருப்பதால் உயிர்ப்பான உரையாடலாகவும் இருக்கிறது. விலங்குகள் பறவைகள் குறித்தும் சுற்றுச்சூழல் குறித்தும் தமிழில் பரவலாக நூல்கள் வந்து கொண்டிருக்கும் நற்காலம் இது. பிற உயிரிகளின் வாழ்க்கையுடன் மனித வாழ்க்கையை ஒப்பு நோக்குகிற வகையில் இது தனித்துவமான நூலாகும்.
No product review yet. Be the first to review this product.