புதுமைப்பித்தன் ஈடுபாடு வழியே தமிழ் இலக்கிய உலகில் புகுந்த சுந்தர ராமசாமியின் முதல் இலக்கிய வழிகாட்டி ரகுநாதன். ‘சாந்தி’யின் மூலமாக அறிமுகம் பெற்ற சுந்தர ராமசாமி, 1950களில் ரகுநாதனோடு நெருங்கிப் பழகினார். பொதுவுடைமை இயக்கத்தோடு ஏற்பட்ட விமரிசனத்தின் காரணமாக அவரிடமிருந்து விலகல் ஏற்பட்டது. புதுமைப்பித்தன் ஈடுபாடு காரணமாக ரகுநாதனோடு முதலில் ஏற்பட்ட நெருக்கம், அதே காரணமாக 1990களில் புதுப்பிக்கப்பட்டது. சு.ரா.வின் வாழ்வில் எந்தத் தருணத்திலும் ரகுநாதன் மீது அவர் கொண் டிருந்த மதிப்பு ஒரு மாற்றும் குறையவில்லை என்பதை இந்த நினைவோடைப் பதிவு காட்டு கிறது. ரகுநாதன், சு.ரா. ஆர்வலர்களும் இலக்கிய அன்பர்களும் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் இடதுசாரி இயக்கத்தில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. - ஆ. இரா. வேங்கடாசலபதி
No product review yet. Be the first to review this product.