1980களுக்குப் பிறகு கறுப்பிலக்கியப் பதிவுகள் தமிழில் பெருமளவில் வரத் தொடங்கின. தமிழில் தலித்திய, பெண்ணிய எழுத்துகளின் மீது இவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. காலச்சுவடு இதழில் கறுப்பிலக்கியப் பதிவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. 1988-2025 ஆண்டுகளில் காலச்சுவடு இதழ்களில் வெளியான கறுப்பிலக்கியப் படைப்புகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொகுப்பில் கறுப்பிலக்கியத்தின் அரசியல், சமூகம் சார்ந்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
2025இல் காலச்சுவடு பதிப்பகம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2024 டிசம்பரில் காலச்சுவடு 300ஆவது இதழ் வெளியானது. இந்தத் தருணங்களை முன்னிட்டுக் காலச்சுவடு இதழில் வெளியான முக்கியமான பதிவுகளை நூல்களாகத் தொகுக்கும் திட்டத்தின் தொடக்கமாக இந்தத் தொகுப்பு வெளியாகிறது.
No product review yet. Be the first to review this product.