Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

ஆக்காண்டி

(0)
Price: 180.00

In Stock

SKU
ETHIR 317

ஒற்றைப் போராக கண்முன் சித்தரிக்கப்படுவதன் வேர்களில் உள்ள முடிச்சுகளை

தொட்டு எழுதி வரும் வாசுமுருகவேலின் அரசியல் பார்வை எழுத்தில் பூடகமாவே வெளிப்படும்.  ஆனால் இந்நாவலில் வெளிப்படையாகவே வருகிறது.  


ஒரு இலக்கியகர்த்தாவாக அடிப்படைவாதங்களின் ஊற்றுமுகத்தையும் விளைவையும் இதில் மையப்பொருளாக்கி யிருக்கிறார்.  அடிப்படைவாதத்திற்கு மொழி இனம் மதம் என பாகுபாடு கிடை யாது. அனைத்து தளங்களில் இருந்தும் எழுந்து வந்தபடிதான் இருக்கிறது.  மொழி அடிப்படைவாதம் தன் சுயலாபத்துக்காக எதிர் தரப்புக்குள் மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கிறது. அதன் விளைவு, தன்னை ஊக்குவித்தவர் மீதே பின்னால் பாய்கிறது. இந்த இரு காலங்களையும் முன்னுக்குப் பின்னாக சொல்லிச்செல்கிறது வாசுமுருகவேலின் நாவல்.


இதை நாவல் நிகழும் ஈழமண்ணில் மட்டும் வைத்து பார்க்காமல் சர்வதேச அரசியலுக்குள்ளும் வாசகரால் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். 


நாவலில் சுட்டப்படும் தரப்புகளை விவாதிக்கலாம் மறுக்கலாம். அது ஈழப்போரின் அரசியல் சார்ந்த தெளிவுகளைத்தரலாம். ஆனாலும்  அதைத் தாண்டி  நாவல் குறிப்பிடும் மையப்பொருள் கவனம் கொள்ள வைக்கிறது.  எந்த ஒரு பிரதேசமானாலும் அங்கு அடிப்படைவாதம் யாரால் ஊக்குவிக்கப்படுகிறது? அதன் தேவை என்ன ? அதன் சமகால பயனாளிகள் யார் யார் என்று ஒரு விவாதத்தையும் இது துவக்கக் கூடும். அத்தகைய விவாதங்கள் முந்தைய காலத்தின் மீதான  ஒரு பிரேதபரிசோதனையாக இல்லாமல் நிகழ்காலத்திற்கும் ஒரு புரிதலை அளிக்கும். அந்த வகையில் இது முக்கியமான நாவலாகிறது.


-  ஆர்.காளிப்ரஸாத்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.