பட்டுகோட்டை பிரபாகர் ஃப்ளைட் ஹைஜாக்கை மையமாகக் கொண்டு குமுதம் வார இதழில் இந்த கதையைத் தொடராக எழுதி வந்தார். ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள், இவர்களது வாழ்க்கைக் கனவுகள், இலட்சியம், அடிப்படை சித்தாந்தம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு தொடங்கி சர்வதேச அரசியல்வரை உள்ள நடப்பு நிகழ்வுகள் எல்லாம் இடம் பெரும் ஒரு வலைபின்னலாகக் கதையை அமைத்து பிரமிக்க வைக்கிறார். 44 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலை ஓவியர் ஷ்யாமின் படங்களுடன் அதிகபட்சம் 100 காட்சிகள் கொண்ட ஒரு கையடக்கத் திரைப்படமாகவே பாவிக்கத் தோன்றுகிறது.
No product review yet. Be the first to review this product.