இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருக்கவில்லை. போர் உச்சம் பெற்று நாளாந்தம் படையினரின் சடலங்கள் சவப்பெட்டிகளில் வீடுகளுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் ‘பிரபாகரனும் நேசிக்கப்பட வேண்டியவர்’ என்று சிங்களவர்களுக்கு அன்பாக எடுத்துரைக்கும் இந்த நாவலை அந்தச் சமயத்தில் எழுதுவதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமாதானத் தூதுக் குழுக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றோடு இலங்கை அரசாங்கம், பாராளுமன்றம் ஆகியவற்றின் குறைபாடுகளையும் செயற்பாடுகளையும் ஊழல்களையும் வெளிப்படையாக விமர்சித்திருப்பதால் அதிகார வர்க்கத்திலிருந்தும் இந்த நாவலுக்கும் நாவலாசிரியைக்கும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.
No product review yet. Be the first to review this product.