Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

அஹில்லா: நிலவின் 28 தோற்றங்கள்

(0)
Price: 220.00

In Stock

Book Type
ரமீஸ் பிலாலி
SKU
SEERMAI 015
இந்த நாவல் ‘ஷைஃகுல் அக்பர்’ (மாபெரும் குரு) என்று ஸூஃபிகள் அழைக்கும் இப்னுல் அறபி அவர்கள் மீதான ஒரு புனைகதை. இது, அவர் எழுதிய ‘பிரபஞ்ச மரமும் நான்கு பறவைகளும்’ என்னும் ஞான நூலினை அடிப்படையாகக் கொண்டது. யாசீன் என்னும் 30 வயது ஊமன் செவில் மியூசியத்தில் 28 நாள்களுக்காகப் பணியமர்த்தப்படுகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சில கடிதங்களை மொழிபெயர்ப்பது அவன் வேலை. அந்த 28 நாள்கள் யாசீனை மாற்றுகின்றன. இப்னுல் அறபியின் எழுத்துகளில் ஆழ்ந்துபோகத் தூண்டுகின்றன. அதிலிருந்து அவன் காதல், ஆன்மிகம், ஞானம் ஆகியவற்றின் பாடங்களைப் பயில்கிறான். கடிதங்களைக் கண்டுபிடித்ததற்கு மேலாக அதில் வேறு விசயங்களும் இருப்பதை அவன் உணர்கிறான். ரகசிய அறை ஒன்றில் அந்தலூஸியப் படச்சீலை ஒன்று மறைந்துள்ளது. அது ‘இப்னுல் அறபியின் ரகசிய அறை’. அந்தப் படச்சீலை கடிதங்களின் உள்ளடக்கத்தை அறபி மொழியின் 28 எழுத்துகளுடனும் நிலவின் 28 பிறைத் தோற்றங்களுடனும் நெய்கிறது. தன் வேலையில் யாசீனுக்கு முழுதிருப்தி கிடைக்கிறது. ஆனால், விரைவிலேயே அவன் தன் அலுவலரான இளம் பெண் மீராவிடம் ஈர்க்கப்படுகிறான். இந்த இனிய காதல் கதை உருவாகி வளரத் தொடங்கும்போதே யாசீனின் அண்ணன் பத்ரு குறுக்கிடுகிறான். தீவிரவாத அமைப்பு ஒன்றின் உறுப்பினரான அவன் தன் தம்பியையே பகடையாக்கி இப்னுல் அறபியின் ரகசிய அறையில் தொங்கும் படச்சீலையைக் கொள்ளையடிக்க முயல்கிறான். யாசீனின் முன் இரண்டு பாதைகள் பிரிகின்றன. ஒருபக்கம் மீராவின் மீதான காதல்; மறுபக்கம் அண்ணன் பத்ரு கோரும் வேலை. இரண்டில் ஒன்றை அவன் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.