பெண்கள் தாங்கள் கண்ட கனவுகளை அடைவது கடினம். அவர்கள் வாழும் சமுதாயம், சூழ்நிலை, பெற்றோர், பொருளாதார நிலை என்று பல காரணங்கள் தடையாக முளைத்து நிற்கும். அதை மீறி வெல்லும் சில பெண்களை இந்தச் சமூகம் நினைவில் வைத்திருக்கும். ஆனால் இதை எதிர்கொள்ள முடியாமல் தோற்றுப் போகும் பெரும்பாலான பெண்களை இந்தச் சமூகம் மறந்துவிடுகிறது.
அப்படிப்பட்ட ஒரு பெண் தன் கனவைத் தன் மகள் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறாள். இந்த நாவலின் கதாநாயகி, தான் கனவுகள் யாவும் பொய்யான பிறகு, தன் மகளின் எதிர்காலத்தை ஒரு பொற்கனவாகக் காணத் தொடங்குகிறாள். அந்தக் கனவை நனவாக்கிட அவள் பல சிகரங்களை ஏறுகிறாள். தன் மகளுக்கு ஓர் அடையாளம் கிடைக்க அவள் முன்னெடுக்கும் முயற்சிகளின் வாயிலாகத் தன்னுடைய அடையாளத்தையும் மீட்டெடுக்கிறாள்.
இந்த ‘அம்மாவின் பொற்கனவு’ ஒவ்வொரு யதார்த்தப் பெண்ணின் கனவும் கூட!
தான் நிஜத்தில் கண்ட சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இந்தத் தெலுங்கு நாவலை எழுதி இருக்கிறார் சுஜலா கண்ட்டி. சரளமான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ராஜி ரகுநாதன்.
No product review yet. Be the first to review this product.