சமூக இலக்கியத் தடத்தில் அவசியமானதொரு படைப்பாகவே நான், இந்நூலைக் கருதுகிறேன் காரணம் இந்தியாவில் காலங்காலமாக சமூகவியலை, அதன் சிக்கலை, அதன் சமமற்ற வளர்ச்சிப்போக்கை விதவிதமான கலாச்சார கரைசலை ஊற்றி உலகின் பொதுப் பார்வையிலிருந்து மறைத்து மானுடப் பண்பும், கலாச்சாரமுமற்ற மானுடப் - பண்புக்கு முரணான பாரம்பரியங்களை உயர்த்திப் பிடிக்கிற நிகழ்கால சமூகச் சூழலில் அணங்கு போன்ற படைப்புகள் அவசியமாகப்படுகிறது.
- கரண் கார்க்கி --
கவித்துவமும் கருத்தும் செறிவுமாக அணங்கு தலைப்பில் தொடங்கி, ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவினுறும் மொழிநடையில் ஆக்கப்பட்டது. சிறப்பு. வாசகர் கதைக்குள் நேரடியாக களமிறங்கி கதாபாத்திரங்களில் பலவித அனுபவங்களுடன் பயணித்து இறுதியில் ஓரிடத்தில் திகைத்து நிற்கக்கூடும்.
- உமா ஷக்தி
No product review yet. Be the first to review this product.