"கடவுளின் எதிர்ப்பு ராணுவம்" என்ற பெயரில் உள்நாட்டில் தொடங்கிய போராளிகள் குழுவொன்று ! உகாண்டாவின் அமைதியை, இயல்பு வாழ்வை, காதலை நட்பை, குழந்தைகளின் பால்யத்தை, கல்விக்கனவை கலைஞர்களாக தாங்கள் வாழப்போகும் நுட்பத்தை என எல்லாவற்றையும் அழித்தொழித்து, சிதைத்து, பல குழந்தைகளையும் அம்மாக்களையும் புத்தி பேதலிக்க வைத்து, அப்பாக்களை வெட்டி புதைத்து, அந்த அழகான நாட்டை சுடுகாடாக்கி, வேடிக்கை பார்த்து. எக்காளமிட்டு சிரிக்கிறது. இதுவரை அந்த அமைப்பால் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 66000 க்கும் மேல் எனும்போது மூச்சே நின்றுவிடுகிறது.
அரிச்சுவடியில் காணப்படாத எழுத்துக்களாய் உருமாறியிருக்கும் இந்த வாழ்வியலும் மொழிபெயர்ப்பும் என்னை இன்னுமின்னும் செதுக்கி இன்னுமின்னும் மனிதர்களை நுட்பமாய் பார்க்கவும் ப்ரியம் மீதுர நேசிக்கவும் வைக்கிறது. அவர்களின் வாழ்வியல் வலியால், சட சடத்து பெரும் இரைச்சலுடன் கடந்து போன ரயிலின் ஒற்றை சாட்சியாய் கிடக்கும் தண்டவாளங்களைப் போல மனம் அதிர்ந்து, அமைதியாய் கிடக்கிறது.
எழுதிய ஸ்நேகிதி லம்வாகாவையும் அதை தமிழுக்குத் தந்த தம்பி ரிஷானையும் இறுக கட்டி அணைத்து முத்தமிட்டுக் கொள்கிறேன். அவர்கள் இருவரின் மூச்சுக்காற்றும் என்னுள் கலந்து ஒற்றையாய் சுவாசித்து அது இந்த பிரபஞ்ச வெளியெங்கும் பரவக் காத்திருக்கிறேன். கே.வி.ஷைலஜா
No product review yet. Be the first to review this product.