நவீனப் படைப்புகளில் உலக அளவில் முதன்மையான நாவல்களில் ஒன்று அல்பெர் கமுயின் ‘அயலான்’. 1942ஆம் ஆண்டு வெளியான இந்தப் படைப்பு, 75க்கும் மேலான மொழிகளில் மொழியாக்கம் கண்டு உலகம் முழுவதும் வாசகர்களையும் படைப்பாளிகளையும் ஈர்த்துவருகிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா என்பது மனிதர்களை எப்போதும் துரத்திக்கொண்டிருக்கும் கேள்வி. இதற்கான விடையை நேரடியாகச் சொல்லாமல் குறிப்புணர்த்தும் இந்த நாவல் வாழ்வின் அபத்தத்தை உணரவைக்கிறது. நாவலின் கதையாடலும் மொழிநடையும் வாழ்வின் பொருள் குறித்த கேள்விக்கான விடையைக் கண்டடைய உதவுகின்றன.
No product review yet. Be the first to review this product.