இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் புகுந்த நாளிலிருந்து வெளியேறிய நாள்வரை, ஈழத்தின் மண்ணுக்கும் மக்களுக்கும் நிகழ்ந்ததைச் சித்திரிக்கும் படைப்பு இது. இந்தியாவை நட்பு நாடாகவே கருதிவந்த ஈழத் தமிழர்களின் எண்ணம் இதன் பிறகு மாறியதாகவே பலரும் கருதுகிறார்கள். இந்திய அமைதிப்படை ஈழத்தில் தங்கியிருந்த காலத்தின் நிகழ்வுகளைச் சொல்லும் இந்த நாவல் அதனால் ஈழத் தமிழர் மனங்களிலும் வாழ்விலும் ஏற்பட்டுவிட்ட நிரந்தரமான மாற்றங்களை அடையாளம் காண முயல்கிறது. வரலாற்றுப் பதிவை காலாபூர்வமான கண்ணோட்டத்துடன் முன்வைக்கும் இரவி அருணாச்சலம் ஈழத் தமிழரின் வாழ்வையும் வரலாற்றையும் புனைவின்வழி ஆவணப்படுத்திவருகிறார். அந்த வகையில் இது அவரது ஐந்தாவது நாவல்.
No product review yet. Be the first to review this product.