உங்களுடைய தொழிலில் பொருத்தமான வணிக உத்திகளை அமைப்பதன் மூலம் உங்களுடைய வணிக முன்னுரிமைகள் குறித்தத் தெளிவை உங்களால் பெற முடியும், உங்கள் வசமிருக்கும் வளங்களைச் செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும், முன்னெப்போதையும்விட மிகச் சிறந்த விளைவுகளைப் பெற முடியும். இது சிக்கலானதாகத் தோன்றினாலும், இதை அனைவரும் புரிந்து கொள்கின்ற விதத்தில் பிரையன் டிரேசி இந்நூலில் எளிமையாக விளக்குகிறார். இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும்: • மக்களுக்கு உத்வேகமளிக்கின்ற நிறுவனத் தொலைநோக்கைத் தீர்மானிப்பது எப்படி • புதிய சந்தைகளை உருவாக்கிக் கொள்வது எப்படி • போட்டிக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்வது எப்படி • புதிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் உங்கள் வணிகத்தை முழுமையாக மாற்றியமைப்பது எப்படி • தெளிவான நிதி நோக்கங்களின் அடிப்படையில் வெற்றியை அளவிடுவது எப்படி மாவீரன் அலெக்சாண்டரிலிருந்து ஐபிஎம் மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் வரையிலான பல எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி, உங்களுடைய வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதற்கும் இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை பிரையன் டிரேசி இந்நூலில் எடுத்துரைக்கிறார். உங்கள் நிறுவனத்தின் தலைவிதியை உங்களுடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இந்நூல் உங்களுக்கு உதவும்.
No product review yet. Be the first to review this product.