{"title":"இலக்கியம்","description":"","products":[{"product_id":"soothadi-சூதாடி","title":"Soothadi சூதாடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும். அந்த தர்க்கமே அவனை தொடர்ந்து சூதாட வைத்து சூதாடியாகவே இருக்க வைக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/fyodor-dostoyevsky\"\u003eFyodor Dostoyevsky\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44033237975110,"sku":"WC006","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Soothadi.jpg?v=1762159232"},{"product_id":"vennira-iravugal-வெண்ணிற-இரவுகள்","title":"Vennira Iravugal வெண்ணிற இரவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅவர்களுக்கு வார்த்தைகள் போதுமானதாகயில்லை, பேசிப் பேசி களைத்துப் போகிறார்கள் ஆனால் இருவருமே உடலைப் பெரிதாக எண்னவில்லை உடல் இல்லாமல் வார்த்தை வழியாகவே ஒருவரையொருவர் கட்டிக் கொள்லவம், அரவணைத்துக் கொள்ளவும் விரும்புகிறார்கள். கனவுலகவாசி தனது உருவத்தைக் கண்னாடியில் பார்ப்பதுபோலவே நாஸ்தென்கா வழியாகத் தனது ஆசைகளைக் காண்கிரான் காதல் அவர்களைப் பித்தேற்றுகிறது. -எஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/fyodor-dostoyevsky\"\u003eFyodor Dostoyevsky\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44033240531014,"sku":"WC007","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Vennira-iravugal.jpg?v=1762159480"},{"product_id":"இரண்டு-பேர்-erandu-per","title":"இரண்டு பேர் Erandu Per","description":"\u003cp\u003e\u003cspan\u003eடால்ஸ்டாயை வாசிக்கையில் என்ன நேர்கிறது. முதலில் அது ஒரு ரஷ்ய நாவல் என்ற அந்நியத்தன்மை விலகிப்போய் மிக நெருக்கமாக வாழ்வை அது விவரிக்கிறது. அத்தோடு நாவலின் மையமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதில்லை. நாவல் வாழ்வின் எண்ணிக்கையற்ற கிளைவேர்களுடன் இணைந்தே விரிவடைகிறது. அத்தோடு நாவலின் வழியாக சமகாலமும் வாழ்வின் சுகதுக்கங்களும் அபத்தங்களும் விவரிக்கபடுகின்றன. விமர்சிக்கபடுகின்றன. அதே நேரம் ரஷ்யவாழ்வின் தனித்துவங்களும் அதன் கலாச்சார நுண்மையும் நம்மால் உணர முடிகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003eகுறிப்பாக டால்ஸ்டாய் என்ற கதைசொல்லியின் ஆளுமை பன்முகப்பட்டது. சிலவேளைகளில் அது ஒரு போர்வீரனைப் போல கலக்கமற்று வாழ்வினை விவரிக்கிறது. சில வேளைகளில் அது ஒரு ஞானியைப் போல வாழ்வு இவ்வளவு தான் என்று அடையாளப்படுத்துகிறது. இன்னும் சில தருணங்களில் அது ஜிப்சியைப் போல சாகசமே வாழ்க்கை என்கிறது. சில தருணங்களில் இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்பாக மனித வாழ்க்கை காற்றில் அடித்து செல்லப்படும் ஒரு மணல்துகள் என்று சுட்டிக்காட்டுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003e- எஸ். ராமகிருஷ்ணன்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003e2012ல், இரண்டு பேர் நாவலை மையமாக வைத்து ‘Boxing Day' என்ற ஆங்கிலப் படம் எடுக்கப்பட்டது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/leo-tolstoy\"\u003eLeo Tolstoy\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44033241841734,"sku":"WC008","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/irandu-per.jpg?v=1762159694"},{"product_id":"புத்துயிர்ப்பு-puththuyirppu","title":"புத்துயிர்ப்பு Puththuyirppu","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நாவலின் பிரதானப் பாத்திரம் நெஹ்லூதவ் ஒரு லட்சியப் பாத்திரமாக இருக்கிறான். அன்றாட வாழ்க்கை அவலங்களிலிருந்து விடுபட விரும்புபவனாக இருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு புனிதரைப் போல வலம்வருகிறான். நெஹ்லூதவ் போன்ற ஒரு பாத்திரம், யதார்த்தத்தில் அபூர்வமானது. ஆனால், யதார்த்தத்தில் இருப்பதைச் சொல்வதுதான் இலக்கியம் என்று சுருக்கிவிட முடியாது இல்லையா? ஒரு சமூகம் என்னவாக இருக்க வேண்டும் என்று எழுத்தாளர் கனவுகாண்கிறாரோ அதுவே இலக்கியமாக அவரிடமிருந்து உருப்பெறுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003eடால்ஸ்டாய் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசுகிறார். சிறிது சிறிதாக நடந்த மாற்றங்களால் நாம் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் இயல்பானதாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டோம்; நம் கண் முன்னே நடக்கும் அவலங்களை அப்படிக் கண்ணை மறைத்துக்கொண்டு கடந்துபோகாதீர்கள் என்று சொல்கிறார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e‘வீடு கட்டுவதற்காக ஒருவன் கல்லை வைக்கும்போது, இந்த உலகத்தைக் கட்டமைப்பதில் தன்னுடைய பங்கையும் அளிக்கிறோம் என்ற உணர்வுதான் மானிடம்’ என்கிறார் பிரெஞ்சு எழுத்தாளர் எக்சுபெரி. இதையே வேறு வார்த்தைகளில், நம் கண் முன்னே நடக்கும் குற்றங்களுக்கு, நம் கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களுக்கு நாமும் ஒரு காரணம் என்று நினைப்பதுதான் மானிடம் என்கிறார் டால்ஸ்டாய்!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e- த.ராஜன் ( தமிழ் திசை நாளிதழில் வந்த ”புத்துயிர்ப்பு” நாவல் விமர்சனம்”)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/leo-tolstoy\"\u003eLeo Tolstoy\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44033242988614,"sku":"WC009","price":650.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/puththuyirppu.jpg?v=1762159817"},{"product_id":"moondru-kathal-kathaigal-மூன்று-காதல்கதை","title":"Moondru Kathal Kathaigal மூன்று காதல்கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம் வாசகர்கள் துர்கேனிவின் படைப்பை அறிமுகம் செய்துகொள்ள இந்தக் குறு நாவல்களிலிருந்தே தொடங்குகிறார்கள், மனித உணர்ச்சிகளின் தன்னிகரற்ற உலகை இவற்றில் காண்கிறார்கள். துர்கேனிவ் வருணித்துள்ள நிகழ்ச்சிகள் நம் காலத்துக்கு நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை ஆயினும், நம் காலத்தவர்களையும் நேரடியாகப் பங்குகொள்ள வைக்கின்றன. ஏனெனில் என்றும் நிலைத்திருப்பவையும் அழிக்க முடியாதவையுமான, இயல்பான மனித உணர்ச்சிகளை இவை விவரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"Polaris-Box\"\u003e\n\u003cdiv class=\"_ActivatorWrapper_8rdhq_95\"\u003e\n\u003cdiv id=\"PRODUCT.metafields.custom.language-anchor\"\u003e\n\u003cdiv role=\"button\" aria-label=\"Edit Language metafield\" class=\"_ActivatorButton_8rdhq_99\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"_RowWrapper_8rdhq_22\"\u003e\n\u003cdiv class=\"_HoverContainer_8rdhq_8\"\u003e\n\u003cdiv class=\"_FormFieldLabel_8rdhq_48\"\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D\"\u003eஇவான் துர்கேனிவ்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44033244004422,"sku":"WC010","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Moondru-Kadhal-Kathai.jpg?v=1762159915"},{"product_id":"arshanmugasundarathin-padaipalumai","title":"ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை","description":"\u003cp\u003eதமிழ் வட்டார நாவல் இலக்கியத்தின் முன்னோடி ஆர். ஷண்முகசுந்தரம். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர். கொங்கு வட்டார மொழியும் வாழ்வும் அவர் படைப்புகளில் துலங்கி நிற்கின்றன. 1942இல் வெளியான 'நாகம்மாள்' நாவலை 'இந்திய வட்டார இலக்கியத்தின் முன்னோடி' என்று க.நா.சு. சொல்கிறார். ஆர். ஷண்முகசுந்தரம் ‘மணிக்கொடி' இதழில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிப் பிறகு நாவலாசிரியராக உருவானார். இந்தி வழியாக வங்க மொழி நாவல்கள் பலவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அவரது மொத்தப் படைப்புகளைப் பற்றிய அறிமுகமாகவும் விமர்சனமாகவும் இந்நூல் அமைந்துள்ளது. முன்னோடிப் படைப்பாளர் ஒருவரது படைப்புகளை அணுகும் முறைக்குச் சான்றாக இந்நூல் விளங்குகிறது. சுயபார்வை, விமர்சன மொழி, எளியநடை, வாசிப்புத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு இனிய படைப்புப் பயணமாக விளங்கும் நூல் இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage :Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/perumal-murugan\"\u003eபெருமாள் முருகன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44119026991174,"sku":null,"price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/shanmu.jpg?v=1763797021"},{"product_id":"vel","title":"வேல்","description":"\u003cp\u003eவளர்ப்பு விலங்குகள் இந்திய வீடுகளுக்குள் நுழைந்ததும் குடும்ப உறவுகளில் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அவற்றைப் நுட்பமாகவும் பருண்மையாகவும் புரிந்துகொள்ள முடிகிறது. வளர்ப்பு விலங்குகளால் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், மாற்றங்கள் குறித்து எழுத எவ்வளவோ உள்ளன. இத்தொகுப்பு மூலமாகச் சில கதைகளை உங்கள் முன் வைக்கிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபூனைகளுக்கும் நாய்களுக்கும் மனிதக் குணங்கள் ஏறுவதை அல்லது ஏற்றுவதை நகைச்சுவையாகச் சில கதைகளிலும் காத்திரமாகச் சில கதைகளிலும் எழுதியிருக்கிறேன். மனித உறவுகள் நிழலாகி மனித-வளர்ப்பு விலங்கு உறவு பெரிதாகிவரும் சித்திரத்தை இக்கதைகள் கொண்டிருக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇக்கதைத் தொகுப்பு என் எழுத்துக்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e-பெருமாள்முருகன்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage :Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/perumal-murugan\"\u003eபெருமாள் முருகன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44119068213318,"sku":null,"price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/vel.jpg?v=1763800450"},{"product_id":"en-payanam","title":"என் பயணம்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D\"\u003eஅசோகமித்திரன்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cbr\u003eதமிழின் முதன்மையான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இது. 1971முதல் 1987 வரையிலான அசோகமித்திரனின் 19 ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், அலங்காரம் தவிர்த்த நடை, தனித்துவமான பார்வை என அசோகமித்திரனின் சிறப்பம்சங்கள் இந்த நூலிலும் அழுத்தமாகக் காணப்படுகின்றன. இதிலுள்ள கட்டுரைகள் தன்வரலாற்றுத் தன்மை கொண்டவை என்பது இந்த நூலின் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44343834116166,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/enpayanam.jpg?v=1765620238"},{"product_id":"mouni-ve-saaminaaadha-sarma-n-s-krishnan","title":"மௌனி, வெ. சாமிநாத சர்மா, என். எஸ். கிருஷ்ணன்: நினைவோடை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sundara-ramasamy\"\u003eசுந்தர ராமசாமி\u003c\/a\u003e\u003cbr\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதை பகிர்ந்துகொள்வதே சு.ரா.வின் நினைவோடை. நூல் வரிசையின் முதன்மை நோக்கமும் பயனும். இந்நூலில் எழுத்தாளர் மௌனி, சிந்தனையாளர் வெ. சாமிநாத சர்மா, திரைக்கலைஞர் என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்துகொள்கிறார். ஒன்றுக்கொன்று வேறுபட்டவர்களான இந்த ஆளுமைகளை தோழமையுடனும் சமரசமற்றப் பார்வையுடனுமே அறிமுகப்படுத்துகிறார். சு.ராவைத் தவிர வேறு எவரால் “இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அதிர்ச்சிகளைக் குறைக்கவும் அவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்” என்ற அனுபவ வாசகத்தைச் சொல்ல முடியும்?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44356513071174,"sku":null,"price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/mauny.jpg?v=1766048301"},{"product_id":"kavimani-ninaivodai","title":"கவிமணி: நினைவோடை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sundara-ramasamy\"\u003eசுந்தர ராமசாமி\u003c\/a\u003e\u003cbr\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ஆளுமையாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திகழ்ந்தவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் நவீனப் பேராளுமையாக விளங்கியவர் சுந்தர ராமசாமி. நிறைவாழ்வு வாழ்ந்த கவிமணிக்கு உரிய அங்கீகாரம் அவருடைய வாழ்வின் இறுதிப் பகுதியிலேயே கிடைத்தது. கவிமணியின் மறைவுக்கு முந்தைய சில ஆண்டுகளில் சுந்தர ராமசாமி அவரோடு பழகினார். அந்த அனுபவங்கள் சுவாரசியமான ‘நினைவோடை’ப் பதிவாக ஆகியுள்ளன. இலக்கியம், அரசியல் ஆகியவை பற்றி முற்றிலும் வேறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தாலும் நேர்மையாகவும் மிகுந்த மரியாதையுடனும் கவிமணியின் ஆளுமையைத் தேர்ந்த மொழியில் சித்திரித்துள்ளார் சுந்தர ராமசாமி. - ஆ.இரா. வேங்கடாசலபதி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44356523130950,"sku":null,"price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/kavimani.jpg?v=1766048873"},{"product_id":"na-pichamoorthy-ninaivodai","title":"ந. பிச்சமூர்த்தி: நினைவோடை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sundara-ramasamy\"\u003eசுந்தர ராமசாமி\u003c\/a\u003e\u003cbr\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eமணிக்கொடி எழுத்தாளர், புதுக்கவிதை முன்னோடி என்று சிறப்பிக்கப்படும் ந. பிச்சமூர்த்தியின் தூரத்துத் தோற்றமே இலக்கிய வாசகனுக்கு இதுவரை கிடைத்து வந்திருப்பது. ஓர் ஆளுமையாக அவரது அண்மைச் சித்திரத்தைத் தனது நேர் அனுபவங்கள் வாயிலாக உருவாக்குகிறார் சுந்தர ராமசாமி. ந. பிச்சமூர்த்தியின் வாசகனாக மட்டுமல்லாது அவரது இலக்கிய நன்னடத்தை மீது மதிப்புக் கொண்டவராகவும் சுந்தர ராமசாமி வெளிப்படுகிறார். வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் அதிக இடைவெளியில்லாத மனிதராக பிச்சமூர்த்தியை அவர் காட்டுகிறார். எழுத்தை முகாந்திரமாக வைத்துத் தன்னை முன்னிருத்திக் கொள்ளாதவராகவும் எழுத்தைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியமானது என்ற நம்பிக்கை கொண்ட இலட்சியவாதியாகவும் ந. பிச்சமூர்த்தியைச் சித்தரிக்கிறார் சுந்தர ராமசாமி. இந்தச் சித்திரம் பிச்சமூர்த்தியின் ஆக்கங்களை நெருக்கமாகப் புரிந்துகொள்ளவும் அவரது ஆளுமையுடன் பொருத்தி விளங்கிக்கொள்ளவும் உதவுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44356525129798,"sku":null,"price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/pichamoorthy.jpg?v=1766049161"},{"product_id":"sundara-ramasamy-nerkaanalgal","title":"சுந்தர ராமசாமி நேர்காணல்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sundara-ramasamy\"\u003eசுந்தர ராமசாமி\u003c\/a\u003e\u003cbr\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசுந்தர ராமசாமி படைப்புகளின் சிந்தனை முகம் அவருடைய நேர்காணல்கள். ஒரு படைப்பாளியாகவே தமது எண்ண ஓட்டங்களை நேர்காணல்களில் சு.ரா. முன்வைக்கிறார். சுயப் பறைகொட்டிக் கொள்ளாமல் கேள்வியாளரையும் வாசகரையும் இணையாகக் கருத்துத் தளத்தில் சந்திப்பதே சு.ரா. நேர்காணல்களின் சிறப்பு. தமிழ் வாழ்வின் ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் நிகழ்ந்த கலை, இலக்கிய, பண்பாட்டுச் சலனங்களை இந்த நேர்காணல்களிலும் கேள்வி பதில்களிலும் பதிவு செய்திருக்கிறார் சு.ரா.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44357011767366,"sku":null,"price":390.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"appothum-kadal-paarththu-kondirunthathu-desanthiri","title":"அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44363118411846,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/appothum.jpg?v=1766139623"},{"product_id":"enatharumai-tolstoy","title":"எனதருமை டால்ஸ்டாய்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003ch4\u003e\u003cbr\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eடால்ஸ்டாயில் துவங்கி தாகூர் வரையிலான இலக்கிய ஆளுமைகளின் மேன்மைகளை அவர்களது படைப்பு மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளோடு பதிவு செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் எனதருமை டால்ஸ்டாய்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44365743849542,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/enatharumai.jpg?v=1766214446"},{"product_id":"ezhuthe-vazhkai","title":"எழுத்தே வாழ்க்கை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003ch4\u003e\u003cbr\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஎஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும் எழுத்துலக அனுபவங்களையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் அவரது இலக்கிய வாழ்க்கையின் ஆவணப்படம் போலுள்ளது. மல்லாங்கிணரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த அவரது அனுபவங்கள் ஒரு எழுத்தாளன் உருவாக எவ்விதமான சவால்களை, போராட்டங்களைக் கடந்து வர வேண்டியுள்ளது என்பதன் சாட்சியாக விளங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44365782483014,"sku":null,"price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/eluththae.jpg?v=1766215396"},{"product_id":"gandhiyin-nizhalil","title":"காந்தியின் நிழலில்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eமகாத்மா காந்தி குறித்து நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் புனைவுகளைத் தொகுத்து காந்தியின் நிழலில் என்ற நூலை உருவாக்கியுள்ளேன். காந்தி குறித்து நான் எழுதிய சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44371355238470,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/gandhi_40a55c6a-d122-4d4c-abd3-3265c4b7878f.jpg?v=1766391050"},{"product_id":"sithirangalin-vichithirangal","title":"சித்திரங்களின் விசித்திரங்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசித்திரங்களின் விசித்திரங்கள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44371508002886,"sku":null,"price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/sithirangalin.jpg?v=1766394765"},{"product_id":"siriya-unmaigal","title":"சிறிய உண்மைகள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபோர்ஹெஸ் தனது The Book of Sand கதையில் NEITHER THE BOOK NOR THE SAND HAS ANY BEGINNING OR END என்கிறார் வாசிப்பின் போது சில வரிகள், சில நிகழ்வுகள். நினைவுகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் பொருட்கள். எழுத்தின் ஆதாரங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் எனது இணையதளத்தில் வெளியானவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44371514425414,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/siriya.jpg?v=1766395447"},{"product_id":"raman-ethanai-ramanadi","title":"இராமன் எத்தனை இராமனடி","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/a-k-perumal\" target=\"_blank\"\u003eஅ.கா. பெருமாள்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉலகில் எத்தனை இராமாயணங்கள் உண்டோ அத்தனை இராமர்களும் உண்டு. உலக இலக்கியங்களில் இவ்வளவு அதிகம் மாற்றுப் பிரதிகள் கொண்ட காவியம் வேறு இல்லை. இராமனைப் போல இடம். இனம், மொழி கடந்து இவ்வளவு அவதாரங்கள் எடுத்த வேறொரு காவிய நாயகனும் இல்லை. எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் இராமாயணங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்திய இராமர்கள் தவிர சீன, மலேசிய, கம்போடிய ராமர்களும் புகழ்பெற்றவர்கள். இந்துக் கடவுளாக வழிபடப்படும் இராமன் பவுத்தக் கடவுளாகவும் சமணக் கடவுளாகவும் கூடப் போற்றப்படுகிறான். நகரப் பண்பாட்டில் மட்டுமல்லாமல் நாட்டார் பண்பாட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இராமனின் பன்முகத் தோற்றங்களையும் அதையொட்டிய கதைகளையும் சடங்குகளையும் இந்நூலில் அ. கா. பெருமாள் சுவைபடக் கூறுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44386655928390,"sku":null,"price":290.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/raman_e8d71969-8923-41ca-8157-c95a8ef968fb.jpg?v=1766838029"},{"product_id":"tamizharinyargal","title":"தமிழறிஞர்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/a-k-perumal\" target=\"_blank\"\u003eஅ.கா. பெருமாள்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்ப் பனை ஓலைகள் அச்சில் வர ஆரம்பித்த காலத்திலேயே தமிழ்மொழி, பண்பாடு, காலம் குறித்த ஆய்வுகள் தொடங்கிவிட்டன. இந்த ஆராய்ச்சியாளர்களில் பலர் சாதாரணமாய் வாழ்ந்தவர்கள். வறுமை, நோயால் தாக்கப்பட்டவர்களும் உண்டு. இவற்றைத் தாண்டி தமிழ் நூற்களை ஆராய்வதையும் பதிப்பிப்பதையும் வேள்வியாகச் செய்தவர்கள் இவர்கள். இப்படியான சிலரின் வாழ்வையும் அவர்களின் புத்தகங்களையும் பற்றிக் கூறுவது இந்நூல். ஆவேசமோ விருப்பு வெறுப்போ இன்றிச் சமகால வாசகருக்குக் கூறும் மிகைப்படுத்தல் இல்லாத நடை, அறிஞர்கள் குறித்த அபூர்வமான சில தகவல்கள். ஓர் அறிஞரை முழுமையாகப் புரிந்துகொள்ளத் தக்க செறிவு ஆகியவை இந்நூலிலுள்ள கட்டுரைகளின் சிறப்புகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44386660745286,"sku":null,"price":370.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/tamilari.jpg?v=1766839095"},{"product_id":"muthaliyaar-olaikal","title":"முதலியார் ஓலைகள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/a-k-perumal\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஅ.கா. பெருமாள்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅச்சில் வராத ஆவணங்களைப் பதிவுசெய்வது என்னும் செயல்பாடு தமிழில் அருகிவிட்டது. மிகமிகக் குறைந்த பதிவுகளில் இந்த நூலும் ஒன்று. கி.பி. 13 முதல் 17ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலகட்டங்களில் நாஞ்சில் நாட்டின் நீராதாரம், வேளாண் தொழில், அதன் சிக்கல், நாட்டு மன்னர் வேளாண் தொழிலில் காட்டிய ஈடுபாடு, அடிமைச் சமூகம், சாதிகளுக்குள் உறவு எனப் பல தகவல்கள் இத்தொகுப்பில் உள்ளன. சமூக வரலாறு எழுதுபவர்களுக்கும் மொழி வல்லுநர்களுக்கும் சரியான ஆதாரம், பின்னிணைப்பில் கொடுக்கப்பட்ட குறியீடுகளில் பல கல்வெட்டுகளில் காணப்படாதவை. வரலாற்றுச் செல்வங்களாகக் கருதத்தகும் இந்த ஆவணங்கள் யாவும் முறையாகத் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியவை. அ.கா. பெருமாள் மிக ஆர்வத்துடனும் முயற்சியுடனும் தொகுத்துப் பதிப்பித்துள்ள இந்த ஆவணத் தொகுதி தமிழ்நாட்டில் பரவலாக உள்ள பிற ஓலை ஆவணங்களைத் திரட்டவும் பயன்படுத்தவும் தூண்டுகோலாக அமையும் என்று கருதுகிறேன். அவருக்குத் தமிழ்நாடு, கேரள வரலாற்று ஆர்வலர் அனைவரும் மிகவும் கடமைப்பட்டவர்கள். -அறிமுகத்தில் Y. சுப்பராயலு)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44386661105734,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/mudhaliyar.jpg?v=1766839318"},{"product_id":"uyir-perum-punaivu-chithirangal","title":"உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/aravindan\"\u003eஅரவிந்தன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅரவிந்தனின் இக்கட்டுரைகள் எளிமையான தோற்றத்திலிருக்கும் பிரம்மாண்டமான உலகத்தின் சொற்கள். படைப்பு, படைப்பாளி, வாசகர், வாசிப்பு, மொழி, நூலகம் முதலான இலக்கியச் செயல்பாடுகளின் அக, புறக் கூறுகளை இக்கட்டுரைகள் அலசுகின்றன, படைப்பின் வியத்தகு அம்சங்களை நடைமுறை வாழ்வுடன் இணைத்துப் பேசும் கட்டுரைகளுடன் மொழியைப் பற்றிய நுட்பமான, கூர்மையான அலசல்களும் உள்ளன. சொல் தனக்கு முன்னும் பின்னுமாகக் கொண்டுள்ள அரசியலையும் தத்துவத்தையும் அறிந்துகொள்ள உதவக்கூடிய கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44391885602886,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/uyirperum.jpg?v=1767003212"},{"product_id":"engeum-eppothum-spb-nenaivalaigal","title":"எங்கேயும் எப்போதும்: எஸ்.பி.பி. நினைவலைகள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/aravindan\"\u003eஅரவிந்தன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஎல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44391892516934,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/engaeyun.jpg?v=1767003520"},{"product_id":"neela-velicham","title":"நீல வெளிச்சம்","description":"\u003cp\u003eLanguage : Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kn-senthil\" target=\"_blank\"\u003eகே.என். செந்தில்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉள்ளார்ந்த விழிப்புணர்வும், புறரீதியான பிரக்ஞையுணர்வும் மனிதர்களின் உள்இயக்கமானக் கலைத்தன்மையைத் துலங்கச்செய்யும் என்பதனை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன. செந்திலின் வாசிப்பு அணுகுமுறையானது இலக்கியப் படைப்பொன்றின் உள்ளடக்கத்தில், அதன் பெறுமானம் எத்தகையதாக அமைந்துள்ளது என்பதையே பிரதானப்படுத்துகிறது. எழுத்துக்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் முதன்மைக் கவனமும் தீவிரமான பற்றுதியும் ஈடுபாடும் கொண்டவராகவே காணப்படுகிறார். கலைரசனை, தர்க்கம், இலக்கியம், வெளிப்படும் ஆற்றல் போன்றவை ஒரு படைப்பாக்கத்தில் உள்செறிவாக அமைந்துள்ளதைப் பொறுத்தே அதனை அவர் பரிந்துரைக்கவும் நிராகரிக்கவும் செய்கிறார். கே.என். செந்தில் சமகாலத்தில் துல்லியமான, நேர்மையான விமர்சனப் பார்வையைக் கொண்டவர் எனக் கருத முடியும். - அனார்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44396670648390,"sku":null,"price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/neela_16750fd9-7f30-4f04-9c27-d372e7d7d95d.jpg?v=1767259829"},{"product_id":"beach","title":"பீச்","description":"\u003cp\u003eLanguage : Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/g-karl-marx\" target=\"_blank\"\u003eஜி.கார்ல் மார்க்ஸ்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003e\u003cspan class=\"im\"\u003e\u003cstrong\u003eஇன்னொரு காலத்தின் புனைவு\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eநவதாரளவாதத்திற்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. பணத்தைத் தவிர அதன் மனதில் எதுவும் இல்லை. மனிதர்கள் வெறுமனே சரக்குகளாகியிருந்தார்கள். யாரேனும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். யாரோ முடித்து வைக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமேற்கை ஒப்பிட, மூன்றாம் உலக நாடுகளின் விழுமியங்கள் பாரதூரமான வித்தியாசங்கள் உடையவை. பல வண்ணங்களும் குணங்களுமாய் ஒளிர்ந்தணைபவை. அவற்றில் ஓர் இடையீடு நிகழ்ந்திருக்கிறது. ஒரு சுபாவ மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்தக் கார்ப்பரேட் தன்மை நம் அன்றாடங்களையும் ஊடுருவத் தொடங்கி கால் நூற்றாண்டாகிறது. அவை பாரம்பரியமான மனித சுபாவங்களில், விழுமியங்களில், வாழ்க்கைப் பார்வையில் ஓர் ஊசலாட்டத்தை நிறுவியிருக்கின்றன. அது சரியா தவறா என்ற விவாதங்களுக்கு அப்பால் அதனூடாக விரியும் வாழ்வை அதை எதிர்கொள்ளும் மனிதர்களை பேசிச் செல்கிறது இந்நாவல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅதிகாரத்தின் நுண்ணிய அலகுகள், தனிமனிதர்கள் அதனூடாகச் செய்துகொள்ளும் சமரசங்கள், அதனால் உண்டாகும் கசப்பும் வெறுமையும் ஒரு சிதறல் தன்மையில் வெளிப்பட்டு பிறகு ஒன்றிணைந்த ஒன்றாகத் தோற்றம் கொள்கின்றன. நாவலின் இந்தச் சிதறல் பண்பு, உதிரித்தன்மை இன்னொரு புதிய காலத்தை, அதன் புதிய புனைவுப் பரப்பை உருவாக்குகிறது.\u003c\/span\u003e\u003cspan class=\"im\"\u003e\u003cbr\u003e\u003cbr\u003e- சதீஷ்குமார் சீனிவாசன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44400140484678,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/beach.jpg?v=1767421175"},{"product_id":"ingivarai-naam-perave","title":"இங்கிவரை நாம் பெறவே - ஆளுமைகள் பற்றிய பார்வைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆளுமைகளின் வரலாறு என்பது சமூகத்தின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் வரலாறாகவும் தொழிற்படுகிறது. “ஆளுமைகளினூடாகச் சமூக அசைவியக்கத்தை இனங்காண்பது சுவையான முறையியலாகும்” என்று வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடா சலபதி குறிப்பிடுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அதைத்தான் செய்கின்றன. சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஜெ. சுடர்விழி ஆளுமைகள், மரபிலக்கியம், நவீன இலக்கிய விமர்சனங்கள் சார்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார். தமிழின் முக்கியமான ஆளுமைகள் சிலரைப் பற்றி அவர் எழுதிய தனித்துவமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. வி.மு. சுப்பிரமணியம், பரிதிமாற்கலைஞர், கு. அழகிரிசாமி, அம்பை, ஆ.இரா. வேங்கடாசலபதி, பாமா, இமையம் முதலான பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய விரிவான அலசல்கள் இதில் உள்ளன. ஆளுமைகளின் பின்புலம், வாழ்க்கை, செயல்பாடுகள் ஆகியவற்றைத் தொகுத்துத் தருவதோடு, அவர்களுடைய பங்களிப்புகள் குறித்த தனித்துவமான பார்வையும் இதில் வெளிப்படுவதைக் காணலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage :Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: ஜெ.சுடர்விழி\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44564573126726,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ingivarai.jpg?v=1770189853"},{"product_id":"amuthin-amuthu","title":"அமுதின் அமுது","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறந்த இலக்கியங்களை வாசித்த அனுபவமும் தேர்ந்த ரசனையும் கொண்டவர்களாலேயே இலக்கியப் பிரதிகளின் உள்ளே உறையும் அர்த்தங்களையும் நுட்பங்களையும் கண்டு சொல்ல முடியும். பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் அத்தகைய விமர்சகர்களில் ஒருவர். பண்டைய இலக்கியங்கள் முதல் நவீன படைப்புகள்வரை அவர் அலசும் ஒவ்வொரு பிரதியும் புதுப்புது முகங்களைக் காட்டுகின்றன. வாசிப்பின் புதிய கதவுகளைத் திறக்கின்றன. இக்கட்டுரைகளின் முக்கியமான பலம் இவற்றில் ஊடாடும் கற்றல், கற்பித்தல் பண்புகள். ஒவ்வொரு கட்டுரையும் ஏதோ ஒருவகையில் அறிதலைத் தருவதாக அமைந்துள்ளது. கல்யாணராமனின் தனித்துவமான அலசல்களில் வெளிப்படும் தரிசனங்கள் இந்நூலில் ‘அமுதின் அமு’தாகத் திரண்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage :Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: கல்யாணராமன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44564765573190,"sku":null,"price":650.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/amuthin.jpg?v=1770196204"},{"product_id":"naduporil-theevaiththal","title":"நடுப்போரில் தீவைத்தல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக அறிந்தவர். படைப்பை ரசித்து, அதன் நுட்பங்களை ஆராய்ந்து தனக்கென ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்பவர். அதைச் சுவையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் எழுதுபவர். பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையான கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. திரைப்படம் தொடர்பான கட்டுரைகளும் உள்ளன. இந்தக் கட்டுரைகளில் தத்துவம் இருக்கிறது. அரசியல் கூர்ப்புண்டு. விஞ்ஞானக் கண்ணோட்டம் இழையோடுகிறது. அழகியல் நோக்குள்ளது. நுனிப்புல் மேய்தல்? இல்லை. ஆழ்வார் பாசுரங்கள், மணிமேகலை, திருக்குறள் முதலிய பண்டைய இலக்கியங்கள் முதல் கு. அழகிரிசாமி, தி. ஜானகி ராமன், தஸ்தயேவ்ஸ்கி, கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன், ஆத்மாநாம், பெருமாள்முருகன், பெருந்தேவி முதலான நவீன படைப்பாளிகளின் ஆக்கங்கள்வரை பல்வேறு இலக்கியப் பிரதிகளைப் பற்றிய ஆழமான, தனித்துவமான அலசலை இக்கட்டுரைகளில் காணலாம். பா. இரஞ்சித், ராம் ஆகிய இயக்குநர்களின் திரைப்படங்களைப் பற்றிய பார்வையும் இதில் உள்ளது. இலக்கிய வாசகர்களும் மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage :Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: கல்யாணராமன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44564773306438,"sku":null,"price":590.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nadfuporil.jpg?v=1770196661"},{"product_id":"ippothu-uyirodirukkiren","title":"இப்போது உயிரோடிருக்கிறேன்","description":"\u003cp\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது. நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மனிதர்களை எந்திரங்களாக மாற்றிக்கொண்டேயிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்த ஏஜெண்டுகள், மருத்துவமனைகள், கோர்ட்டுகள், அலுவலகங்கள்; கண்டுபிடித்துச் சொல்ல மட்டுமே முடிந்த, சரிசெய்யத் தெரியாத விஞ்ஞானம்; மனிதர்களுக்காக மனிதர்கள் உருவாக்கி, நிர்வகிக்கும் குரூரமான அமைப்புகள். வாழும் ஆவலுக்கும் மரணம் என்ற யதார்த்தத்துக்குமிடையே, எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் செயலற்றிருக்க முடியாமல் அல்லாடுவதை தர்மமாக ஏற்றுக்கொண்டுவிட்ட குடும்பம் என்ற பரிதாபமான கருவி. எல்லாம் தற்செயல்தானா? நிச்சயமின்மை, தனிமை, அர்த்தமின்மை இவற்றுக்கு என்ன நிவாரணம்? நாவலின் நேர்மையான பரிசீலனையில் வெளிப்படுவது: குடும்பம் உள்ளிட்ட நிறுவனங்களின் கையாலாகாத்தனம்; அவற்றுக்கிடையேயான முரண்பாடுகள்; எல்லாவற்றுக்கும் மையமான மனிதன் எங்கே? சமூக வாழ்வின் பிரச்சினைகளான ஏற்றத்தாழ்வும், சுரண்டலும், இரக்கமின்மையும் அன்றாட வாழ்வில் - வாழ்வதும் இருப்பதும் ஒன்றல்ல - பிரதிபலிக்கும் விதத்தில், அடைவதற்கு அரிதான மன அமைதியுடன் எழுதப்பட்டுள்ள - உத்தியும் சவாலானதுதான் - இமையத்தின் இந்த நாவல் இன்னொரு தளத்தில் புதிய உயரத்தை அடைந்திருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670551359558,"sku":null,"price":370.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ippothu.jpg?v=1771833629"},{"product_id":"silappathikaaram-aaychiyar-kuravai-aaivu","title":"சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை ஆய்வு","description":"\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: அமுதா பாண்டியன்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cimg\u003e\u003cspan\u003eசிலப்பதிகார மதுரை காண்டத்தின் அரங்கேற்றுக்காதையில் நிகழும் ஆய்ச்சியர் குரவை, மேய்ச்சல் நில மக்களின் குரவைக் கூத்து, குரவைக் கூத்து என்பது நாட்டிய நாடகத்தைக் (Operர் குறிக்கும். இது. ஒரு செவ்வியல் கூத்து. இக்குரவையில் சுரங்களை எப்படிப் பிடித்துப் பாடி ஆடினர் என்பதை இளங்கோவடிகள் 15 அடிகளில் விவரிக்கிறார். இந்தக் கூத்தைப் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் செய்தவர், நம் தமிழிசைத் தந்தை ஆபிரகாம் பண்டிதர், அவர் தன் 'கருணாமிர்தசாகரம்'.\u003c\/span\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44806724714566,"sku":null,"price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/silapathigarathin.jpg?v=1774600740"},{"product_id":"kalainjarin-ilakkiya-aalumai","title":"கலைஞரின் இலக்கிய ஆளுமை","description":"\u003cp\u003eஆசிரியர் : இரா.அறவேந்தன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003ePublisher:  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sahitya-akademi-books\" target=\"_blank\"\u003eசாகித்திய அகாதெமி\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமுத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திருக்குவளை எனும் சிற்றூரில் பிறந்தவர்; வசனகர்த்தா பத்திரிகையாசிரியர் எழுத்தாளர் அரசியல்வாதி முதலமைச்சர் எனப் பன்முக ஆளுமை வாய்ந்தவர் நாவல் சிறுகதை கவிதை கட்டுரை கடிதம் நாடகம் திரைவசனம் எனப் பல்வேறு இலக்கிய வகையில் சுமார் ஒரு லட்சம் பக்க அளவிற்கு எழுதியவர். சமநிலையும் சமூக நீதியும் சமூகத்தில் மலர வேண்டுமெனத் தன் எழுத்துப் பயணத்தை வரையறுத்துக் கொண்டவர். இவர்தம் நூற்றாண்டை முன்னிட்டு சாகித்திய அகாதெமிக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது. இந்த நூல், கலைஞரின் ஒட்டுமொத்தப் படைப்புலகில் காணலாகும் இலக்கிய ஆளுமையை வெளிக்கொணர்ந்துள்ளது; எதிர்கால இலக்கிய உலகிற்கான கை விளக்காகவும் திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":45083956609094,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/1_030aebbb-052f-400b-a793-45cc89da113b.jpg?v=1779865837"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/collections\/litera.png?v=1762260242","url":"https:\/\/wecanshopping.com\/collections\/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d.oembed?page=2","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}