{"title":"கி. ராஜநாராயணன்","description":"","products":[{"product_id":"gopallapuraththu-makkal","title":"கோபல்லபுரத்து மக்கள் (காலச்சுவடு)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/ki-rajanarayanan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகி. ராஜநாராயணன்\u003c\/a\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகோபல்லபுரத்து மக்களின் எளிமையும் வெள்ளந்தி மனமும்தான் இந்த நாவலின் உயிரோட்டம். அந்தக் கிராமத்தின் ஆன்மாவைத் தன் எழுத்தால் கி.ரா. படம் பிடிக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eமண் ஒன்றானாலும் மனங்கள் பிளவுபட்டிருக்கின்றன. இந்தப் பிளவை நாட்டில் நடக்கும் விடுதலைப் போரோடு இணைக்கிறார்; கோபல்லபுரத்தாரால் நேரடியாகப் போரில் ஈடுபட முடியவில்லை. ஆனாலும் தலைவர்களின் நோக்கையும் போக்கையும் கண்டு விமர்சனம் செய்யும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் விரிவடைகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e‘கோபல்ல கிராமம்’ நாவலின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த நாவலில் சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதைத் தனக்கே உரிய நடையில் சொல்கிறார் கி.ரா. ஒவ்வொரு வரியிலும் மண் வாசனை வீசும் இந்த நாவல் தமிழின் சிறந்த வட்டார வழக்கு நாவல்களில் ஒன்று என்னும் சிறப்பையும் பெற்றது.\u003c\/p\u003e\n\u003cp\u003e1991ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் இது.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44384778649670,"sku":null,"price":390.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/gopalla.jpg?v=1766732494"},{"product_id":"gopalla-graamam-kalachuvadu","title":"கோபல்ல கிராமம் (காலச்சுவடு)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/ki-rajanarayanan\" target=\"_blank\"\u003eகி. ராஜநாராயணன்\u003c\/a\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44384984236102,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/gramam.jpg?v=1766733012"},{"product_id":"kathavu","title":"கதவு","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/ki-rajanarayanan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகி. ராஜநாராயணன்\u003c\/a\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e‘கதவு\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003cspan lang=\"EN-IN\"\u003eகி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட.\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகரிசல் வட்டார வழக்கை நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம்பெறச் செய்த முதல் தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகுழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், மரங்கள், மாடுகள், ஆடுகள், கோழிகள், பறவைகள், பூக்கள், பூச்சிகளின் வழியாகப் புதுவகையான கதைகளைச் சொல்கிறார் கி.ரா.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇக்கதைகளில் வரும் பாத்திரங்களின் ஆசைகளும் ஏமாற்றங்களும் தோல்விகளும் தியாகங்களும் அரசியலும் அன்றாடமும் யதார்த்தத்தைச் சித்திரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇளம் படைப்பாளிகள் பலருக்கும் இன்றளவும் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் அமைந்திருக்கும் தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44384996589638,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/kathavu.jpg?v=1766733370"},{"product_id":"pinjugal-kalachuvadu","title":"பிஞ்சுகள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/ki-rajanarayanan\" target=\"_blank\"\u003eகி. ராஜநாராயணன்\u003c\/a\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eமக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் 'பிஞ்சுகள்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eபள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகிய சிறுவர்கள் வழியாக மகிழ்ச்சியின் உச்சிக்கிளையைத் தொடுகிறது. ரப்பர் வில்லுடன் திரியும் திருவேதி நாயக்கர் பறவை வேட்டையை மாய ஜாலத்துடன் நிகழ்த்திக் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eவாழ்வின் அசைவுகளை இயற்கையின் துணையோடு புனைவுகளாக்கும் கி.ரா., சிறுவர்களோடு வளர்ப்பு மைனாக்கள், காகங்கள், நாய்கள், கிளிகளையும் இந்த நாவலில் பாத்திரங்களாக்கியிருக்கிறார். குழந்தைகளின் உலகைக் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கண்டுணரும் விதமாக இயல்பாகப் படைத்திருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44385004585030,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/pinjugal.jpg?v=1766733568"},{"product_id":"intha-ival","title":"இந்த இவள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/ki-rajanarayanan\" target=\"_blank\"\u003eகி. ராஜநாராயணன்\u003c\/a\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் இது. பொதுவாக அவருடைய எழுத்துக்களில் காணப்படும் ரசனை, பண்பாட்டுக் கூறுகள், துல்லியமான பாத்திர வார்ப்பு, மண் வாசனை வீசும் மொழி ஆகிய சிறப்பம்சங்களை இதிலும் காணலாம். இந்தக் கதையில் வரும் பெண் தனித்துவமானவள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eகி. ராஜநாராயணன் தனது 96ஆவது வயதில் எழுதிய படைப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44385027817542,"sku":null,"price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/intha_8eb8f495-4eb9-4946-b9a3-68f7694f2581.jpg?v=1766734104"},{"product_id":"maayamaan-kalachuvadu","title":"மாயமான்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/ki-rajanarayanan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகி. ராஜநாராயணன்\u003c\/a\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை.\u003c\/p\u003e\n\u003cp\u003e- சுந்தர ராமசாமி\u003c\/p\u003e\n\u003cp\u003eகரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44385033224262,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/mayaman.jpg?v=1766734566"},{"product_id":"kidai","title":"கிடை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/ki-rajanarayanan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகி. ராஜநாராயணன்\u003c\/a\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் இங்கு இறுகிப் பிணைந்து கிடைக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கள் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இறுக்கிக் கொண்டிருப்பதை இதில் காண்கிறோம். ஒரு கலை என்ற வகையில் 'கிடை'தான் ராஜநாராயணனின் படைப்புகளிலேயே சிகரம் என்று இப்போதும் எனக்குத் தோன்றுகின்றது. இதில் அவர் காட்டியுள்ள நுட்பம் அலாதியானது.\u003c\/p\u003e\n\u003cp\u003e- எம். ஏ. நுஃமான்\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44385052131398,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/kidai.jpg?v=1766734869"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/collections\/KiRa.jpg?v=1766729564","url":"https:\/\/wecanshopping.com\/collections\/ki-rajanarayanan.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}