{"title":"Nagalakshmi Shanmugam","description":"","products":[{"product_id":"nexus-tamil","title":"நெக்சஸ்","description":"\u003cp\u003eAuthor: யுவால் நோவா ஹராரி\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தொகுத்து வழங்கும் ‘சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள்’ பட்டியலில் முதலிடம் பிடித்த ‘சேப்பியன்ஸ்’ நூலின் படைப்பாசிரியர், இந்நூலில், தகவல் பரிமாற்ற அமைப்புமுறைகள் எவ்வாறு நம்முடைய உலகத்தைக் கட்டமைத்து, பிறகு அதைச் சீர்குலைத்தன என்பது பற்றிய புரட்சிகரமான கதையை விவரிக்கிறார். கதைகள் நம்மை ஒன்றிணைத்தன! புத்தகங்கள் நம்முடைய யோசனைகளைப் பரப்பின - நம்முடைய கட்டுக்கதைகளையும்கூட! இணையம் வரம்பில்லா அறிவுக்கான உறுதியளித்தது! படிமுறைத் தீர்வு நம்முடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, நமக்கிடையே பகைமையைத் தூண்டிவிட்டன! செயற்கை நுண்ணறிவு நம்மை என்ன பாடுபடுத்தப் போகிறதோ! நாம் இந்தக் கணத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பது பற்றியும், நாம் பிழைத்திருக்கவும் தழைத்தோங்கவும் மேற்கொண்டாக வேண்டிய அவசரத் தேர்ந்தெடுப்புகள் பற்றியுமான விறுவிறுப்பூட்டும் விவரிப்பே இந்த ‘நெக்சஸ்’. ‘சேப்பியன்ஸ்’ நூலைப் பற்றிப் பிரபல பத்திரிகைகள் “சுவாரசியமாகவும், ஆர்வத்தைக் கிளறுவதாகவும் இருக்கிறது.” – பராக் ஒபாமா “என் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவர்.” – நேட்டலி போர்ட்மேன் “உங்கள் மூளையில் படிந்துள்ள சிலந்திவலைகளைத் துடைத்தெறிகிறது; சக்தியையும் தெளிவையும் வெளிப்படுத்துகிறது.” – ‘சன்டே டைம்ஸ்’ “நம்முடைய இனத்தையும் நம்முடைய உலகத்தையும் நான் பார்க்கும் விதத்தை இது அடியோடு மாற்றியது.” – ‘த கார்டியன்’\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44674126086214,"sku":null,"price":799.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nexus.jpg?v=1771931970"},{"product_id":"sapiens-manithakulaththin-oru-surukkamaana-varalaaru","title":"சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு","description":"\u003cp\u003eAuthor: யுவால் நோவா ஹராரி\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி:(தமிழில் - நாகலட்சுமி சண்முகம் :\u003cbr\u003eமனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் தகவல்களை இந்நூல் சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுத்தளித்திருக்கிறது. எனினும் இந்த வளர்ச்சி தொடருமா? என்பது பற்றிய நூலாசிரியரின் கேள்வி சிந்திக்க வைக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\"பொருளாதார வளர்ச்சி என்றென்றும் தொடரும் என்று முதலாளித்துவம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்துள்ள அனைத்து விஷயங்களுடனும் முரண்படுகிறது' என்கிறார் நூலாசிரியர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\"நம்மை நாமே கடவுளாக ஆக்கிக் கொண்ட நாம், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத நிலையில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல் நம்முடைய சக விலங்குகளையும், நம்மைச் சூழ்ந்துள்ள சூழல்மண்டலத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சொந்த வசதியும் மகிழ்ச்சியும்தான் நமக்குப் பெரிய விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் நாம் ஒருபோதும் மனநிறைவு அடைவதில்லை... இதைவிட அதிக ஆபத்தானது வேறெதுவும் இருக்க முடியுமா?' என்று மனிதகுல வளர்ச்சி என்று நாம் நம்பிக் கொண்டிருப்பதின் மீது எதிர்மறையான விமர்சனங்களை வைக்கிறார். நாம் வாழும் இன்றைய வாழ்க்கைமுறையைப் பற்றி சிந்திக்க வைக்கும் நூல்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44678670680134,"sku":null,"price":799.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/sapiens.jpg?v=1771937805"},{"product_id":"21-lessons-for-the-21st-century-tamil","title":"21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்","description":"\u003cp\u003eAuthor: யுவால் நோவா ஹராரி\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசேப்பியன்ஸ்' நூலாசிரியரிடமிருந்து மற்றொரு வெற்றிப் படைப்பு : ** நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக்கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம்இயற்கையை அடி பணியவைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்து கொண்டிருக்கிறோம். ** ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா? அல்லது நம்முடைய கண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றனவா? இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இது போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒருசாகசப் பயணத்தில் யுவால்நோவாஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ** நம்மை நிலைதடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், தனிப்பட்டமுறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கிவைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44679005044806,"sku":null,"price":699.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/21nootrandu.jpg?v=1771938107"},{"product_id":"the-happiest-man-on-earth-tamil","title":"உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eEddie Jaku\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eமுதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகள், கற்பனையில்கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை எடி நாள்தோறும் அனுபவித்தார், நாஜிக்களிடம் அவர் தன்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் தன்னுடைய சொந்த நாட்டையும் இழந்தார். இறுதியில் அவர் எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்டதால், இனி தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதென்று அவர் ஓர் உறுதிமொழி மேற்கொண்டார். அவர் தன்னுடைய வதை முகாம் அனுபவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டவற்றைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி வருவதன் மூலமும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதன் மூலமும், நாஜிக்களின் அடக்குமுறையின்கீழ் உயிரிழந்தவர்களுக்கும் தங்களுடைய சொந்தபந்தங்களை இழந்தவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அவருடைய 100 ஆவது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இந்நூல், இருண்ட காலகட்டங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்ற ஒன்றாக மிளிர்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44679218724934,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ulagilayae.jpg?v=1771939000"},{"product_id":"ஹோமோ-டியஸ்-வருங்காலத்தின்-ஒரு-சுருக்கமான-வரலாறு-copy","title":"சின்னஞ்சிறு பழக்கங்கள்","description":"\u003cp\u003eAuthor: ஜேம்ஸ் கிளியர்\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44679494598726,"sku":null,"price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/chinnanchiru.jpg?v=1771938672"},{"product_id":"உலகிலேயே-மகிழ்ச்சியான-மனிதர்-copy","title":"மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு","description":"\u003cp\u003eAuthor: ருட்கர் பிரெக்மன்\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமனிதர்கள் இயல்பிலேயே தன்னலவாதிகள் என்றும், தங்களுடைய சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுத்தே அனைத்தையும் செய்பவர்கள் அவர்கள் என்றும் காலங்காலமாக நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகள்வரை, வரலாற்றியலாளர்களிலிருந்து எழுத்தாளர்கள்வரை, உளவியலாளர்களிலிருந்து தத்துவவியலாளர்கள்வரை அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஒரு நம்பிக்கை அது. இந்த நம்பிக்கையின் வேர்கள் மாக்கியவெல்லியிலிருந்து ஹாப்ஸ்வரை, சிக்மண்ட் பிராய்டிலிருந்து டாக்கின்ஸ்வரை மேற்கத்தியச் சிந்தனைக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளன. ‘மனிதகுலம்’ எனும் இந்நூல் ஒரு புதிய விவாதத்தை முன்வைக்கிறது. அடிப்படையில் மக்கள் நல்லவர்கள் என்று அனுமானிப்பது எதார்த்தமானதாகவும், அதே நேரத்தில் புரட்சிகரமானதாகவும் இருக்கிறது என்ற வாதம்தான் அது. மற்றவர்களோடு போட்டி போடுவதற்குப் பதிலாக அவர்களோடு ஒத்துழைப்பதற்கும், அவர்களைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக அவர்களை நம்புவதற்கும் நமக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வு, பரிணாம அடிப்படையில் உருவான ஒன்று. மற்றவர்களைப் பற்றி மோசமாக நினைப்பது, நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதன்மீது மட்டுமல்லாமல், நம்முடைய அரசியல்மீதும் பொருளாதாரத்தின்மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது. சர்வதேச அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ள நூல்களை எழுதியுள்ள ருட்கர் பிரெக்மன், இந்த முக்கியமான நூலில், உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரபலமான ஆய்வுகளில் சிலவற்றையும், பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றையும் எடுத்து, அவற்றை மறுவடிவமைப்பு செய்து, கடந்த 2,00,000 ஆண்டுகால மனிதகுல வரலாற்றைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறார். மனித இனத்தின் இரக்க குணத்திலும், தன்னலம் பாராமல் பிறருடைய நலன்மீது அக்கறை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொள்வது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைக்கும் என்பதையும், அந்த நம்பிக்கை, நம்முடைய சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் பிரெக்மன் இந்நூலில் காட்டுகிறார்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44680075608134,"sku":null,"price":799.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/manithakulam.jpg?v=1771939286"},{"product_id":"vendre-theeruvom","title":"வென்றே தீருவோம்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eரெய்னர் ஸிட்டல்மன்\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி? இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம். (இவர் பிரபல நாடக மேதைகளான டி.கே.ஆஸ். சகோதரர்களில் ஒருவரான டி.கே. முத்துசாமியின் பேத்தி ஆவார்.) வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44680375926854,"sku":null,"price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/venre.jpg?v=1771939649"},{"product_id":"panakkara-thanthai-ezhai-thanthai","title":"பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eராபர்ட் கியோஸாகி\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eபுத்தகத்தில் காணப்படும் தலைப்புகளில் சில வருமாறு:\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eநிதி பற்றிய அறிவின் பெறுமதி\u003c\/p\u003e\n\u003cp\u003eநிறுவனங்கள் செலவழித்ததன் பின்னரே வரிகளை செலுத்துகின்றனர், அதேவேளை தனிநபர்கள் முதலில் கட்டாயம் வரியைச் செலுத்த வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநிறுவனங்கள் எனப்படுபவை, அனைவரும் பயன்படுத்தக்கூடிய செயற்கையான அமைப்புகள், ஆனாலும் ஏழைகள் அதை எப்படி பயன்படுத்தலாம் என தெரியாதவர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகியோசாகி மற்றும் லேச்ட்டர் ஆகியோரின் கருத்துக்களின் படி, உங்கள் சொத்துகளிலிருந்து வருமானம் எத்தனை நாள்களுக்கு உங்கள் வாழ்வாதாரமாக இருக்க முடியுமென்பதைக் கொண்டே உங்கள் செல்வம் அளவிடப்படும் என்பதாகும். உங்களின் மாதாந்த வருமானம், உங்களின் மாதாந்த செலவை மிஞ்சுகின்ற போதே, செல்வம் அளவிடப்படுவது எனப்படுவது, நிதி நிலைமைகளில் நீங்கள் தன்னிறைவு அடைதல் சாத்தியமாகும். இந்த நூலில் வருகின்ற கதாபாத்திரங்களான இரு தந்தைகளும் தங்கள் மகன்களுக்கு இந்த விடயங்களை கற்பிக்க வெவ்வேறான வழிமுறைகளைக் கையாண்டனர்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44680652292166,"sku":null,"price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/panakara.jpg?v=1771940011"},{"product_id":"business-school-tamil","title":"பிசினஸ் ஸ்கூல்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eராபர்ட் கியோஸாகி\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநெட்வொர்க் மார்கெட்டிங் தொழிலில் செல்வத்தை அடைவதற்கான புரட்சிகரமான வழி, எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும். செயலூக்கம், உறுதியான தீர்மானம் மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44680968765510,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/business.jpg?v=1771940241"},{"product_id":"cashflow-quadrant-tamil","title":"கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eராபர்ட் கியோஸாகி\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.” சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கைவசப்படுத்தக் கற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பணக்காரத் தந்தையின் கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் திரைவிலக்குகிறது. பின்வரும் கேள்விகளை நீங்கள் உங்களிடம் எப்போதேனும் கேட்டதுண்டா? • பெரும்பாலான முதலீட்டாளர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும்போது, சில முதலீட்டாளர்கள் மட்டும் எப்படி மிகக் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு அதிகப் பணம் ஈட்டுகின்றனர்? • சில ஊழியர்கள் தங்களுடைய வேலையைவிட்டு விலகிச் சொந்தமாகத் தொழில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பும்போது, பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தொடர்ந்து ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டே இருக்கின்றனர்? • தொழில் யுகத்திலிருந்து தகவல் யுகத்திற்கான மாற்றம் உங்கள்மீதும் உங்களுடைய குடும்பத்தின்மீதும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தப் போகிறது?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44681123496006,"sku":null,"price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/cash.jpg?v=1771940459"},{"product_id":"21-nootrandukana-business","title":"21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eராபர்ட் கியோஸாகி\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாயிபுகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44681298739270,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/1_4e49db99-52be-48a4-a2c4-07a754519ac5.jpg?v=1771940670"},{"product_id":"zahir-tamil","title":"சஹீர்","description":"\u003cp\u003eAuthor: பாவ்லோ கொய்லோ\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபுகழ் பெற்ற ஒரு நூலாசிரியர், போர்முனைச் செய்திகளைச் சேகரிக்கின்ற ஒரு பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தன்னுடைய மனைவி திடீரென்று ஒரு நாள் எந்தச் சுவடுமின்றித் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். காலம் அவருக்கு அதிக வெற்றிகளையும் ஒரு புதிய காதலையும் கொண்டுவருகின்றபோதிலும், அவர் தொடர்ந்து குழப்பத்தில் இருக்கிறார், அதே நேரத்தில், அந்த மர்மத்தால் அவர் அதிகமாக ஆட்கொள்ளப்படுகிறார். ‘யாரேனும் அவளைக் கடத்திச் சென்றுவிட்டனரா? அவள் மிரட்டப்பட்டாளா? அல்லது, என்னுடனான மணவாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு அவள் தானாகவே எங்கோ போய்விட்டாளா?’ என்றெல்லாம் எண்ணி அவர் தவிக்கிறார். அவளால் ஏற்பட்டுள்ள இந்த மனக் கொந்தளிப்பு, அவளுடைய வசீகரத்தைப்போலவே வலிமையானதாக இருக்கிறது. அவளைக் குறித்தும், அதன் மூலமாகத் தன்னுடைய சொந்த வாழ்வின் உண்மை குறித்தும் அவர் மேற்கொள்கின்ற தேடல், அவரை பிரான்ஸிலிருந்து ஸ்பெயினுக்கும், குரோயேசியாவுக்கும், இறுதியில், மத்திய ஆசியாவின் அழகான ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிக்கும் அழைத்துச் செல்கிறது. அதைவிட முக்கியமாக, அது அவரை அவருடைய பாதுகாப்பான உலகிலிருந்து இடம் பெயர்த்து, அன்பின் இயல்பையும் தலைவிதியின் சக்தியையும் பற்றிய ஒரு புதிய புரிதல் குறித்தத் தேடலுக்கான, முற்றிலும் பரிச்சயமற்ற ஒரு பாதைக்கு இட்டுச் செல்கிறது. இந்நூலின் வாயிலாக, பாலோ கொயலோ, படிப்போரின் மனங்களை வசீகரித்துக் கட்டிப் போடும் விதத்தில் கதை சொல்வதற்கான தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சாத்தியக்கூறுகள் நிறைந்த ஓர் உலகில் ஒரு மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்தத் தன்னுடைய அசாதாரணமான, ஆழமான உள்நோக்கையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44681699688518,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/sahir.jpg?v=1771941986"},{"product_id":"ilakkugal","title":"இலக்குகள்","description":"\u003cp\u003eAuthor: பிரையன் டிரேசி\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர். எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44681704636486,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ilakkugal.jpg?v=1772000169"},{"product_id":"ookkuvippu","title":"ஊக்குவிப்பு","description":"\u003cp\u003eAuthor: பிரையன் டிரேசி\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682922786886,"sku":null,"price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ookkuvippu.jpg?v=1772000350"},{"product_id":"kaalai-elundhavudan-thavalai","title":"காலை எழுந்தவுடன் தவளை","description":"\u003cp\u003eAuthor: பிரையன் டிரேசி\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉங்களுடைய ‘செய்யப்பட வேண்டிய வேலைகள்’ பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் செய்வதற்குப் போதுமான நேரம் ஒருபோதும் இருப்பதில்லை, இனி ஒருபோதும் இருக்கப் போவதும் இல்லை. வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. முக்கியமான விஷயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி, அவற்றை முழுமையாக முடிப்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர். அவர்கள் முதலில் தங்கள் தவளைகளை உட்கொண்டு விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக, உயிருள்ள ஒரு தவளையை நீங்கள் உட்கொண்டுவிட்டால், அன்று அதை விட மோசமான வேறு எதுவொன்றையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்ற நிம்மதியோடு உங்களுடைய அன்றைய நாள் முழுவதும் உங்களால் வேலை செய்ய முடியும் என்ற பழைய கூற்று ஒன்று உள்ளது. உங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்ற, ஆனால் உங்கள் வாழ்வின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தைக் கையாள்வதைக் குறிப்பதற்கு, ‘ஒரு தவளையை உட்கொள்வது’ என்ற உருவகத்தை பிரையன் டிரேசி இந்நூலில் பயன்படுத்துகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682923442246,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/kaalia.jpg?v=1772000526"},{"product_id":"sandhai-nirvagam","title":"சந்தை நிர்வாகம்","description":"\u003cp\u003eAuthor: பிரையன் டிரேசி\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682925244486,"sku":null,"price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/santhai.jpg?v=1772000654"},{"product_id":"thaninabar-vetri","title":"தனிநபர் வெற்றி","description":"\u003cp\u003eAuthor: பிரையன் டிரேசி\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682926981190,"sku":null,"price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thani.jpg?v=1772000810"},{"product_id":"thalaimaiththuvam","title":"தலைமைத்துவம்","description":"\u003cp\u003eAuthor: பிரையன் டிரேசி\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682930978886,"sku":null,"price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thalaimaithuvam.jpg?v=1772001024"},{"product_id":"nirvaaga-thiramai","title":"நிர்வாகத் திறமை","description":"\u003cp\u003eAuthor: பிரையன் டிரேசி\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682931798086,"sku":null,"price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nirvaga.jpg?v=1772001156"},{"product_id":"nera-nirvaagam","title":"நேர நிர்வாகம்","description":"\u003cp\u003eAuthor: பிரையன் டிரேசி\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682932191302,"sku":null,"price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nera.jpg?v=1772001278"},{"product_id":"virpanaiyil-vetri","title":"விற்பனையில் வெற்றி","description":"\u003cp\u003eAuthor: பிரையன் டிரேசி\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682934157382,"sku":null,"price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/virpanaiyil.jpg?v=1772002891"},{"product_id":"saakkuuppokkugalai-vittozhiyungal","title":"சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்","description":"\u003cp\u003eAuthor: பிரையன் டிரேசி\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள். அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682937139270,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/saaku.jpg?v=1772001641"},{"product_id":"asuran-veezhththappattavargalin-veera-kaaviyam","title":"அசுரன்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eஆனந்த் நீலகண்டன்\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபுராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில், படித்துக் கொண்டிருப்பவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் “அசுரன்”. ராவணன் என்கிற அசுரப் பேரரசனின் கதை. ஆனந்த் நீலகண்டனின் \"Asura- Tale of the vanquished\" என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே “அசுரன்”. - இயக்குநர் ராம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682939564102,"sku":null,"price":699.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/asura.jpg?v=1772002216"},{"product_id":"gowravan-part-1","title":"கௌரவன் - உருட்டிய பகடைகள் (பாகம் 1)","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eஆனந்த் நீலகண்டன்\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eநாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும்\u003c\/p\u003e\n\u003cp\u003eநயவஞகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன்’ துரியோதனன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான\u003c\/p\u003e\n\u003cp\u003eபீஷ்மர், தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். பார்வையற்ற திருதராஷ்டிரன், அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி\u003c\/p\u003e\n\u003cp\u003eகாந்தாரியுடன் அரசு பீடத்தில் அமர்ந்திருக்கிறான். இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி, தன் மூத்த மகன் தர்மனை\u003c\/p\u003e\n\u003cp\u003eஅரியனையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇது ஒரு புறம் இருக்க ----\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதே அஸ்தினாபுர அரணமனைத் தாழ்வாரங்களில் பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான்\u003c\/p\u003e\n\u003cp\u003eஒர் அந்நிய நாட்டு இளவரசன். அவன் உருட்டிய பகடைகள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம்\u003c\/p\u003e\n\u003cp\u003eகாணச் செய்து கொண்டிருக்கின்றன\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682961551430,"sku":null,"price":899.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/kauravan.jpg?v=1772002488"},{"product_id":"gowravan-piranthathu-kali-part-2","title":"கௌரவன் - பிறந்தது கலி (பாகம் 2)","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eஆனந்த் நீலகண்டன்\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் 'கௌரவன்' துரியோதனன். இந்த இரண்டாம் பாகத்தில் - போர் மேகங்கள் வெகுவேகமாகச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. தர்மம் மற்றும் அதர்மம் பற்றிய விவாதங்கள் சூடாக நடைபெறுகின்றன. அதிகாரப் பசி கொண்ட ஆண்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கப் போகின்ற ஒரு போருக்குத் தயாராகின்றனர். பெண்களும் பிராமணர்களும் தங்கள் கண்முன்னால் கட்டவிழ்ந்து கொண்டிருக்கின்ற பேரழிவைப் பெரும் அச்சத்துடனும் கையாலாகாத்தனத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பேராசைமிக்க வணிகர்களும் சூழ்ச்சிகரமான புரோகிதர்களும் கழுகுகள்போலக் காத்துக் கொண்டிருக்கின்றனர். தன் பங்குக்கு ஓர் 'அவதாரமும்' சளைக்காமல் சதி செய்து கொண்டே இருக்கிறது. இருண்ட கலிகாலம் உதயமாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆணும் பெண்ணும் கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையேயும், கௌரவத்திற்கும் அவமானத்திற்கும் இடையேயும், உயிர்பிழைத்திருத்தலுக்கும் சாவுக்கும் இடையேயும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் . . . .\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682967253062,"sku":null,"price":599.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/2_5aee7119-ea79-446c-bc48-9f6a3db168ff.jpg?v=1772002826"},{"product_id":"அசுரன்-copy","title":"அசுரன் (Copy)","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eஆனந்த் நீலகண்டன்\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபுராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில், படித்துக் கொண்டிருப்பவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் “அசுரன்”. ராவணன் என்கிற அசுரப் பேரரசனின் கதை. ஆனந்த் நீலகண்டனின் \"Asura- Tale of the vanquished\" என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே “அசுரன்”. - இயக்குநர் ராம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44746963157062,"sku":null,"price":699.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/asura.jpg?v=1772002216"},{"product_id":"rasavathi","title":"ரசவாதி","description":"\u003cp\u003eAuthor: பாவ்லோ கொய்லோ\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள 'ரசவாதி' நூல், நவீன காலத்தின் செம்மையான நூல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. பல கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல், பல தலைமுறைகளைச் சேர்ந்த எண்ணற்ற வாசகர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பாலோ கொயலோவின் இந்த அற்புதப் படைப்பு, ஒரு பெரிய பொக்கிஷத்தைத் தேடிக் செல்ல விரும்புகின்ற, ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த ஓர் இடையனான சான்டியாகோ வின் கதையை எடுத்துரைக்கிறது. அவனுடைய தேடல், அவன் கற்பனை செய்துள்ளதைவிட அதிக வித்தியாசமான, அதிக மனநிறைவு அளிக்கின்ற செல்வ வளங்களுக்கு அவனை வழிநடத்திச் செல்லும். நாம் நம்முடைய இதயம் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்பது, வாய்ப்புகளை அறிந்து கொள்ளுவது, வாழ்க்கைப் பாதை நெடுகிலும் பரவிக் கிடக்கின்ற சகுனங்களைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொள்ளுவது, மிக முக்கியமாக, நம்முடைய கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சான்டியாகோவின் பயணம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44746963419206,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/rasavathy_68903fb2-5dd0-41f9-9948-c13750761fc7.jpg?v=1773647750"}],"url":"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam.oembed?page=2","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}