கூகிள் இணையத் தேடலில், 2020ஆம் ஆண்டு மட்டும் தேடப்பட்ட கேள்விகளில் முதலிடம் பெற்ற கேள்வி, ‘வைரஸ் என்றால் என்ன?' என்பதுதான். இந்தச் சூழ்நிலையில் வைரஸ் பற்றிய தவறான, அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களும் காட்டுத்தீ போல் பரவி, மக்களிடையே குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் விளைவிக்கின்றன. எனவே வைரஸ் குறித்த அறிவியல் அடிப்படையிலான நம்பகமான தகவல்களைத் தருதல் மிகமிக அவசியமாகிறது. இந்தத் தேவையை உணர்ந்து, மக்களிடையே கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியே இந்த நூல். சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும், குறிப்பாக, இளைய தலைமுறையினரை மனதில் கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்று பற்றி நம் மனதில் பொதுவாக எழும் கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்க முயல்கிறது. நூலில் உள்ள தகவல்கள், உலகத் தரம் வாய்ந்த நம்பகமான ஆய்விதழ்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளிலிருந்தும், அதிகாரப்பூர்வமான வலைதளங்களிலிருந்தும் பெற்றவை.
No product review yet. Be the first to review this product.