தமிழில் வெளிவந்துள்ள சிறந்த தலித்தியச் சிறுகதைகளின் ஒரு பெட்டகம். தலித் இலக்கியம் ஒடுக்கபட்ட மக்களைப் பெருமைமிக்க கதாபாத்திரங்களாக ஆளுமை உள்ள மனிதர்களாக, வாழ்க்கையைக் கடைசி மனிதன் கோணத்திலிருந்து பார்க்கும் மக்கள் திரளாகப் படைத்த்து. வடிவம், செய்நேர்த்தி, நடை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தனி அடையாளங்களைக் கொண்டுள்ளது. சமூக மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தலித்தியம் பெண்ணியம் இவற்றைத் தளமாகக் கொண்டு அதிகாரக் குவிப்பை மறுக்கிற நோக்கும், போக்கும் இவற்றில் காணலாம்.
இத்தொகுப்பைத் தொகுத்து அளித்தவர் ப.சிவகாமி. இவருடைய ‘பழையன கழிதலும்’ ‘ஆனந்தாயி’ நாவல்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றன. ‘புதிய கோடங்கி’ இதழின் மூலமும் தனது சிறுகதைகள் மூலமும் வாசக மனங்களில் சிறப்பிடம் பெற்றவர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணிபுரிந்தவர். சாகித்திய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் சிறப்பாகப் பணி செய்தவர்.
No product review yet. Be the first to review this product.