பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அயலகத்தில் வணிக முயற்சிகள், அதன் தொடர்ச்சியாகக் காலனிகளில் ஆதிக்கத்தை நிறுவுதல், ஊடாகக் கத்தோலிக்க மறை வழியில் கிறித்தவம் பரப்புதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது. இந்தியச் சிற்றரசர்களை அணி சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளில், இடையில் சில வெற்றிகள் கிடைத்தாலும், மூன்று கர்நாடகப் போர்களின் முடிவில் தோல்வியே மிஞ்சியது. ஐதர் அலி, திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்தும் வெற்றிபெற முடியவில்லை; இறுதியில் வென்றவர் ஆங்கிலேயரே. பல இந்தியப் போர்களின் முடிவில் வெற்றியின் விளிம்பில் ஃபிரான்சு நின்றபோதிலும், ஐரோப்பியப் போர்களின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்களால் வெற்றிவாய்ப்புகள் கை நழுவிப்போயின. இறுதியில் ஆங்கிலேயரால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டபோது, பாரிஸ் ஒப்பந்தம் காரணமாகவே ஃபிரஞ்சிந்தியப் பகுதிகள் ஃபிரான்சுக்குத் திரும்பக் கிடைத்தன. ஆயினும், புதுச்சேரிப் பிரதேசத்தைத் துண்டுதுண்டாக்கியே திருப்பித் தந்தனர். அத்துடன் ஃபிரான்சின் காலனி வேட்டை முற்றுப்பெற்றது.
No product review yet. Be the first to review this product.