இலங்கைத் தமிழ் மக்களின் தொன்மைச் சிறப்பு வரலாறு பற்றிய ஆய்வும் எழுத்தும் இன்று வரை பற்றாக்குறையாகவே இருக்கும் சூழலில் இந்தக் 'கப்பித்தான்' என்ற வரலாற்று நாவல் இலங்கையின் வடக்கே காணப்படும் மன்னார்த் தீவின் தொன்மைக் குடிப்பரம்பல் பற்றிய வரலாற்று உண்மைகளைப் பேசுகின்றது.
தென் இந்திய தூத்துக்குடி பரதவ மக்கள் கொழும்புத் துறைமுகம் அண்டிய பகுதிகளில் குடியேறிய வரலாறை எழுத்தாளர் ! ஜோ.டி.குரூஸ் தமது கொற்கை நாவலில் பதிவுசெய்திருந்தார். அதுபோல தூத்துக்குடிப் பரதவ மக்கள் மன்னார்த் தீவில் குடியேறியிருந்ததையும் புகழ் பெற்ற உடக்குப் பாஸ் கலை இங்கு பேசாலையில் காண்பிக்கப்படுவதற்கான தோற்றுவாயையும் பிரதான கருப்பொருளாய்க் கொண்டு எஸ்.ஏ. உதயன் இந்த நாவலைப் படைத்திருக்கிறார்.
ஆய்வு ரீதியாக பல உண்மைகளைப் பேசும் இந்த நாவல் எழுத்தாளரின் புனைவுகளுடன் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கின்றது. வழமை போலவே ஆசிரியரது எழுத்துவாண்மையும் அழகியலும் நாவல் முழுவதும் விரவிக்கிடப்பதுடன் அவரது பிற படைப்புகள் போலவே இந்த நாவலும் தனிச்சிறப்புடன் திகழ்கின்றது.
No product review yet. Be the first to review this product.