இள வயதில் ஒரு வழக்கறிஞரிடம் வக்கீல் குமாஸ்தாவாக மூன்றாண்டுகள் பணிபுரிந்த வண்ணநிலவன், நீதிமன்ற வளாகத்து அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாவல் ‘கருப்புக் கோட்டு’. 2016இல் ‘காலம்’ என்னும் தலைப்பில் வெளியான இந்த நாவல் தற்போது புதிய தலைப்புடன் திருத்திய பதிப்பாக வெளியாகிறது. நீதித் துறையுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த அந்த நாட்களில் பல்வேறு விதமான மனிதர்கள், வழக்குகள், கட்சிக்காரர்கள் எனப் பல வித அனுபவங்களுக்கு ஆளாகிய வண்ணநிலவன் அந்த அனுபவங்களை நாவலாக்கியிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் தனக்குக் கிடைத்த கதைகளையெல்லாம் எழுத வேண்டுமென்றால் அதற்கு ஒரு ஆயுள் போதாது என்று கூறும் வண்ணநிலவன், அந்தக் கதைகளின் அடிநாதத்தை ஆதார சுருதியாகக் கொண்டு படைத்திருக்கும் இந்த நாவல் பல்வேறு மனிதர்களையும் அவர்கள் கதைகளையும் குறித்த புரிதலை ஏற்படுத்தக்கூடியது. நீதியைப் பெறுவதற்கான மானுட வேட்கையின் பல்வேறு நிழல்களையும் உணர்த்தக்கூடியது.
No product review yet. Be the first to review this product.