சீன புத்தபிக்கு ஒருவரின் வெந்நீர் கோப்பையில் விழுந்தத் தேயிலையிலிருந்து உலகின் முதல் தேநீர் உருவானதென்னவோ தற்செயலானது தான். ஆனால் அதற்குப் பிந்தைய இந்த இரண்டாயிரம் ஆண்டுகளிலோ உலகமாந்தர்களால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகளவில் பருகப்படுவதாக பரவியிருக்கும் இந்தத் தேநீரின் ஒவ்வொரு சொட்டும் திட்டமிட்ட உழைப்பறிவில் ஊறியே நம் கோப்பையில் வந்தடைகிறது. இயற்கையில் விளைந்துவந்த தேயிலை ஒரு விற்பனைப்பண்டமாக ஆனபோது அந்தப் பண்டத்தை உற்பத்திச்செய்யும் உயிருள்ள பண்டங்களாக வாங்கப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை நம்மிடம் பேச வந்துள்ளது இந்த கூப்புக்காடு நாவல்.
No product review yet. Be the first to review this product.