இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’, மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பிடலாம். எந்தப் பாத்திரத்துடனும் பொருந்திப் போகக் கூடியது. தவிரவும் எக்காலத்துக்குமான பிரதிநிதியாகக் கிருஷ்ணரை வைத்துப் பேசவும் விவாதிக்கவும் முடியும். எல்லா காலத்து மதிப்பீடுகளுடனும் கிருஷ்ணரைப் பொருத்திப் பார்க்க இயலும். கிருஷ்ணர், பெளராணிகர்களின் கைப்பிடிக்குள் இருந்தவரை இந்தச் சாத்தியங்கள் வெளிப்படவில்லை. எப்போது கிருஷ்ணரைப் படைப்பாளிகள் தத்தெடுத்தார்களோ, அன்றைக்கு நிகழத் தொடங்கியது கிருஷ்ணரின் மறுபிறப்பு. இ.பா. வின் இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான். கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியராலும் படைக்கப்பட்டதல்ல; அது ஒரு சமுதாயக் கனவு என்று முன்னுரையில் இ.பா. சொல்கிறார். அந்தக் கனவின் சமகால நீட்சி, இந்நாவல்.
No product review yet. Be the first to review this product.