டாக்டர் அம்பேத்கர் தன் அறிமுக உரையை முடிக்கும்போது இவ்வாறு சொன்னார்: “உண்மையை, நான் சொல்ல வேண்டும் என்றால் புதிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தவறுகள் நடக்குமானால், அதற்குக் காரணம் நாம் மோசமான அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டிருக்கிறோம் என்பது அல்ல; மனிதன் கெட்டவனாக இருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.”
"நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற கொள்கை மட்டுமே அரசியல் ஜனநாயகத்திற்கான லட்சிய வடிவம் என்று நான் சொல்லவில்லை. எந்த இழப்பீடும் கொடுக்காமல் தனிச் சொத்துரிமையை அரசே எடுத்துக் கொள்வது புனிதமானது என்றும் அதிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. அடிப்படை உரிமைகள் முழுமையானவை. அந்த அடிப்படை உரிமைகள் மீது சுமத்தப் பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் நீக்க முடியாதவை என்றும் நான் சொல்ல வில்லை. ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், அரசமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள கோட்பாடுகள் எல்லாம் இன்றைய தலைமுறையின் கருத்துகள்தான், இப்படி நான் சொல்வது அதிகப்படியானது என்று நீங்கள் நினைத்தால், இக்கருத்துகள் அரசமைப்புச் சட்ட அவையின் கருத்துகள் என்றே நான் சொல்வேன். அப்படி இருக்கும்போது, வரைவுக் குழுவை குறை சொல்ல என்ன இருக்கிறது."
No product review yet. Be the first to review this product.