குரோமி X குரோமி வெளிப்படுத்தும் சமகால அரசியல் இவ்விதமான
புதிய எழுத்துமுறையில் அமைந்த பிரதிகளில் வெளிப்படுவது மிகுந்த
நம்பிக்கையைத் தருகிறது. சுஜாதா காலத்தைய இயந்திரக்கதைகளுடன்
ஒப்பிடும்போது அவை வெறும் பொழுதுபோக்குத்தனத்துடனும்,
ஒற்றைத் தன்மையிலான இயந்திர அசைவுகளுடனும் மட்டுமே
அமைந்தன. பெஜோ ஷைலின் தான் உள்வாங்கிய அரசியலை
சகபிரதியாக மாற்றும்போது பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவும்,
ஊமைகளின் மொழியாகவும் ஒலிக்கிறது. ‘ நீங்கள் மைனாரிட்டியான
யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்’ என்ற ஒருவரின் தீட்டல்
நாவலுக்குள் எத்தனையோ வளங்களை சேர்க்கிறது. ‘அந்தந்த
வர்ணத்துல இருக்கிறவன் வர்ரது தான் வாஸ்தவம். நாளைக்கு நீயே
எங்க அகண்ட பாரதத்துல குடியுரிமை வாங்குனாலும் உன்னையும்
சூத்திரனாகவே மதிப்போம்’ என சாக்கடைக்குள் நுழைந்த திசுவிடம்
இயந்திரக்குரோமி உரைக்கும் குரலில் ஒலிப்பது ஆயிரமாயிரம்
ஆண்டுகளின் அரசியல் தானே.
No product review yet. Be the first to review this product.