ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதிப்பிற்குள்ளாக்கிய வண்ணம் - "மெஜந்தா". தமிழகத்தின் ஏதோவொரு மூலையில், சில லட்சங்களுக்காக நடக்கும் ஒரு சாதாரண கொள்ளைச் சம்பவம், chaos theory ஆக விஸ்வரூபமெடுத்து, பல லட்சம் கோடிகள் புரளும் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தையும், அதன் பின்னணியில் நடக்கும் பெரும் குற்றச் செயலையும் அசைத்துப் பார்க்கிறது. ஏன்? எப்படி? எதனால்? என்ற கேள்விகளுக்குப் பின் சமகாலத்தில் நடந்த ஒரு வரலாற்றுப் பிழையை, சுவாரஸ்யமான கதைப் பின்னணியில் வேறொரு கோணத்தில் விவரிக்கிறது இந்த நாவல். தமிழில் அதிகம் முயற்சிக்கப்படாத ‘மாற்று வரலாறு’ என்ற தளத்தில் எழுதப்பட்டிருப்பது நாவலின் மற்றுமொரு சிறப்பு.
No product review yet. Be the first to review this product.