உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். பல வீர, தீர பராக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகச் சிறந்த ராணுவ கமாண்டர் என்று ஒருவரைச் சொல்லச் சொன்னால் அலெக்சாண்டரின் பெயரை மட்டுமே உச்சரிக்கிறது சரித்திரம். ஏன்? அலெக்சாண்டருக்கு உதிரி உதிரியாகக் கனவுகள் காணத் தெரியாது. அவர் கண்டது ஒரே கனவு. கொண்டது ஒரே லட்சியம். உலகம். அது போதும். தான் கலந்துகொண்ட எந்தவொரு போரிலும் தோல்வியடைந்ததில்லை அலெக்சாண்டர். யாரிடமும் எதற்கும் பயந்து பின்வாங்கியதில்லை. காரணம், வாளைக் காட்டிலும் தன் புத்தியைக் கூர்மையாக வைத்திருந்தவர் அவர். தலைமைப் பண்புகள். திட்டமிடும் திறன். எதிரிகளை இனம் கண்டு வேரறுக்கும் பேராற்றல். சரியாகக் கனவு காணும் கலை. அந்தக் கனவை நினைவாக்க செயல்திட்டம் வகுக்கும் திறன். அலெக்சாண்டரிடம் இருந்து அள்ளிக்கொள்வதற்கு நிறைய பொக்கிஷங்கள் இருக்கின்றன. விறுவிறுவிறுவென்று குதிரைச் சவாரி மொழியில் அலெக்சாண்டரின் வாழ்க்கையை விவரித்திருக்கிறார் நூலாசிரியர் முத்துக்குமார். எடுத்தால், முடிக்காமல் வைக்கமாட்டீர்கள்!
No product review yet. Be the first to review this product.