இந்த நாவல் வாழ்க்கை, இறப்பு மற்றும் மறுமையைப் பற்றிய ஓர் அவல நகைச்சுவை. 90களின் இலங்கையில், உள்நாட்டுப் போர்க் குழப்பங்களுக்கு மத்தியில், போர் புகைப்படக் கலைஞனான மாலிஅல்மேதாவைப் இந்நாவல் பின்தொடர்கிறது. மறுமையில் கண்விழிக்கும் அவன் அங்கே எப்படி வந்தான் என்பது அவனுக்கு நினைவில்லை. அரசாங்க அலுவலகங்களை ஒத்த அதிகாரத்துவமிக்க மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் சிக்கியுள்ள அவனுக்குத் தனது மரணத்தின் மர்மத்தை வெளிக்கொணர, அவன் எடுத்த நாட்டின் வரலாற்றையே மாற்றி எழுதக்கூடிய புகைப்படங்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்த ஏழு நிலவுகளே மீதமுள்ளன. சுவாரசியமான மற்றும் எளிமையான மொழிநடையில் கருணாதிலக ஒழுக்கம், ஊழல் மற்றும் போரின் உண்மையான நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கும் கதையை வழங்கியுள்ளார், போரினால் சிதைக்கப்பட்ட தேசத்தின் குரூரமான உண்மைகளை மாய-யதார்த்த எழுத்தின்மூலம் நகைச்சுவையாக வெளிப்படுத்தியிருப்பதே இந்நாவலின் சிறப்பு.
No product review yet. Be the first to review this product.