“முழுவதையும் அறிந்துகொண்டிருப்பதாக உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஏனென்றால், இதுபோன்ற விஷயங்கள் மனிதமொழியில் வெளிப்படுத்த இயலாத தன்மைகொண்டவை. அவை, என்னளவில்கூட, பெரிதும், மறுக்கமுடியாதபடி நிச்சயமானவை என நான் உறுதியாகச் சொல்லமுடியாது. உத்தேசமாகவும், நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதாகவுமே இருந்து கொண்டிருக்கின்றன. நானும் ஒரு மனிதப்பிறவி என்பதால், மானுடத்தைப் புரிந்து கொள்வது என்பது, ஓர் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. எனினும் தெய்விக அருளைப் பெறாத மனிதப்பிறவிகளைக் காட்டிலும் நான் உண்மைக்கு வெகு நெருக்கமாக வந்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்” என்ற டேனியல் பால் ஷ்ரபரின் வாசகங்கள் மச்சடோவின் படைப்புகளுக்கு மிகப் பொருத்தமானவை. மச்சடோ டி ஆசிஸ், பிரேசிலின் முக்கிய படைப்பாளுமைகளில் ஒருவர். போர்ஹேயின் முன்னோடி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய மேதை. ஜோஸ் ஸரமாகோ, கார்லோஸ் ஃபுயன்டஸ், சூசன் சாண்டாக், ஹரால்ட் ப்ளும் போன்ற மகத்தான படைப்பாளிகளால் கொண்டாடப்படுபவர். காஃப்காவின் ‘உருமாற்றம்’, செகாவின் ‘நாய்க்கார சீமாட்டி’, ஜாய்ஸின் ‘மரித்தவர்கள்’ கதைகளுக்கு இணையாக மச்சடோவின் ‘மனநல மருத்துவர்’ மதிப்பிடப் பெறுகிறது.
No product review yet. Be the first to review this product.