சரக்கு நடைசெய்யும் வணிகக் கப்பல்கள், ஆய்வுக் கப்பல்கள் அவற்றின் செயல்பாடுகள் வேறு, மீன்பிடித்தலில் இருக்கும் பாரம்பரியப் படகுகள், விசைப்படகுகள் மற்றும் கப்பல்களின் செயல்பாடுகள் வேறு. மீன்பிடித்தலில் கரைக்கடலில் இயங்கும் பாரம்பரிய மீனவர்களுக்கும், ஆழ்கடலில் கப்பல் வைத்து மீன்வேட்டம் செய்யும் வணிக மீனவர்களுக்கும் வாழ்க்கை முறை பாரதூரமானது. இவர்களுக்கு இடையே விசைப்படகு மீனவர்களும் அவர்களது அண்மைக் கடல் செயல்பாடுகளும்... இவர்கள் அனைவரையும் ஒரே சட்ட வரையறைக்குள் கொண்டு வருவதென்பது, தொடரும் தொழில்சார் புரிதலற்ற அரச அதிகாரத்தின் அடக்குமுறையாகவே படுகிறது.
சட்டங்கள் இயற்றி குடிமக்களை, அவர்தம் வாழ்வாதாரச் செயல்பாடுகளை வரைமுறை செய்ய விரும்பும் ஆட்சியாளர்கள், இந்தக் கள உண்மையை முதலில் புரிந்து செயல்பட வேண்டும். பிரச்சனைக்கான தீர்வு என்பது, அதன் அருகில் சென்று உண்மையை அறிந்து அக்கறையோடு செயல்படுவதின் மூலமே நடக்கும் என்பதை, இவ்வாய்வுப் பதிவின் மூலம் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் சொல்ல விழைகிறார் கிறிஸ்டோபர் ஆன்றணி. அரசும், அதிகார அமைப்புகளும் புரிந்து செயல்பட வேண்டும்.
- ஆர். என். ஜோ டி குருஸ்
No product review yet. Be the first to review this product.