காவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” என உணர்ந்து தெளிந்த ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானகி ராமனும் இணைந்து எழுதிய இப் பணயக் கதை - காவேரிக் கரைக் காட்சிகளை, அவற்றின் பகைப்புலங்களை, காவேரி சார்ந்த வரலாற்றை, பண்பாட்டை, புகைப்படங்கள் கோட்டோவியங்களுடன் தருகிறது. நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தச் செவ்வியல் பயணக் கதை புதிய பதிப்பாக இப்போது வெளிவந்துள்ளது.
No product review yet. Be the first to review this product.