இது நாவல் அல்ல...... ஒரு யுத்த களம். நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நீளமான யுத்தம். இந்த யுத்த களத்தில் போரிடுவது இரண்டு நாடுகள் அல்ல..... இரண்டு உயிரினங்கள். ஒரு உயிரினம் ஆறறிவு படைத்த மனிதன். இன்னொரு உயிரினம் அரை உயிரியான அபாயகரமான வைரஸ். இந்த அரையுயிரி உயிர் வாழ வேண்டுமென்றால் அதற்கு தேவைப்படும் உணவு மனிதனின் செல்கள். ஒட்டுமொத்த மருத்துவ விஞ்ஞானத்தையும் ஏமாற்றிவிட்டு மனிதனின் உடம்பை தன்னுடைய உறைவிடமாகவும் உணவுக் கூடமாகவும் மாற்றிக்கொள்ள முயற்சி செய்யும் இந்த அபாயகரமான வைரஸ்களை ஒழித்துக்கட்டி வெற்றிபெற விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் வெற்றி பெறும் வேளையில் தோற்றுப் போய்விடுகிறார்கள். இதற்குக் காரணம் பயோ வார் (Bio War) எனப்படும் இந்த உயிரியல் யுத்தத்திற்குப் பின்னால் சில நாடுகள் அந்த அபாயகரமான வைரஸ்களோடு கூட்டணி வைத்துக் கொள்வது தான். அப்படி கூட்டணி வைத்துக் கொண்டதால் ஏற்பட்ட விளைவுகளைத்தான் நள்ளிரவு செய்தி துர்கா இந்த நாவலின் ஒவ்வொரு வரியிலும் நீங்கள் வியப்பில் உறைந்து போகும்படி கதை சொல்லப் போகிறாள். ஆனால்....... இது கதையல்ல..... எதிர்காலத்தில் நடக்கப் போகிற நிஜம்.
No product review yet. Be the first to review this product.