Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

நீர் எழுத்து

(0)
Price: 250.00

In Stock

Book Type
சந்தோஷ் நாராயணன்
SKU
KADODI 004
நம் மூச்சு என்பதும் நீரே! நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது. தாகம் தணிக்கும் வெள்ளரியில் உள்ள நீரின் அளவு 96%, தக்காளியில் 95%, தர்ப்பூசணியில் 93%. பாலில் 87% முட்டையில் 74%, நிலவாழ் பெருவிலங்கான யானையின் உடல் என்பது 70% நீர். நிலத்துள் வாழும் சின்னஞ்சிறு மண்புழுவின் உடல் 80% நீர். நீர்நில வாழ்வியான தவளை என்பது 78% நீர், கடலில் மிதக்கும் ஜெல்லி மீன் 95% நீர். நம் உடல் கூட 65% நீர்தான். இது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். ஒல்லியான மனிதர் தன் உடல் எடையில் 70% நீராகக் கொண்டிருக்கலாம். அதேவேளை பெண் தன்னுடலில் சேமிப்பான கொழுப்பின் காரணமாக உடல் எடையில் 52% நீரை மட்டுமே கொண்டிருக்கக்கூடும். உடல் பல வழிகளில் நீரைப் பெறுகிறது. அருந்துவதன் வழி 47%, உணவிலிருந்து பெறுவது 39%, செல்லுலர் ரெஸ்பிரேசன் எனும் வேதியியல் செயற்பாட்டின் வழியும் 14% நீர் உருவாக்கப்படுகிறது. இதையெல்லாம் சிந்திக்கும் நம் மூளை என்பது 74.5% நீர். உடலில் ஓடும் குருதியில் 83% நீர். நுரையீரல் என்பது 70% நீர்; சிறுநீரகம் 82.7% நீர்; தசை என்பது 75.6% நீர். ஒருவரை எலும்பும் தோலுமாய் இருக்கிறார் எனக் கேலி செய்வோமே, அத்தோலில் இருப்பது 64% நீர்; எலும்பும் கூட 22% நீரே. நம் உடலிலுள்ள டிஎன்ஏ மூலக்கூறும் நீராலானது. பல நூறு கோடிக்கணக்கான நீர் மூலக்கூறுகள் அதில் உள்ளன. அதன் சுழல் ஏணி வடிவத்தைக்கூட நீரே தீர்மானிக்கிறது. நீர் இல்லாவிடில் நம் டிஎன்ஏவே அழிந்துவிடும். நம் உடல் நீரில் 1% குறைந்தால் அதற்குப் பெயர் தாகம். அதுவே 12% குறைந்தால் அதன் பெயர் மரணம். இவ்வளவு ஏன்? நீரில்லாது நம் மூச்சுக்கூட வெளிவராது. நம் ஒருநாள் மூச்சில் வெளியாவது ஒரு கோப்பை நீர். புத்தகத்திலிருந்து சில வரிகள்....
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.