Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

நெருங்கி வரும் இடியோசை Nerungi Varum Idiyosai

(0)
Price: 220.00

In Stock

Publisher
Book Type
சேதுபதி அருணாசலம்
SKU
SWASAM 008
“நான் ஏழு நாளா ஒன்னுமே சாப்டல. சின்னச் சின்ன மீன், நத்தைங்கள்லாம் பிடிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். இப்போ அதெல்லாமும் குறைஞ்சு போச்சு. தாமரைக்குளம் இருக்குல்ல, அதெல்லாம் இப்போ வெறும் சேறும் சகதியுமாய்டுச்சு. சின்னப் பசங்க, பொண்ணுங்க எல்லாம் கழுத்தளவு தண்ணில நின்னுக்கிட்டு மீன், நத்தையெல்லாம் கிடைக்காதான்னு அளைஞ்சுக்கிட்டு இருக்காங்க. எல்லாம் காலி. சின்னக் குழந்தைகள்லாம் கரையில உக்காந்து அழுதுக்கிட்டு இருக்காங்க. அதுங்க அழுகைய நிறுத்தறதுக்காக, அம்மாக்காரிங்கள்லாம் பச்சை நத்தையைப் பிடிச்சு அவங்க வாய்ல திணிச்சிட்டு, இன்னும் கிடைக்குமான்னு குளத்துக்குள்ள போறாங்க. அதையெல்லாம் சாப்பிட்டு எத்தனையோ குழந்தைங்க செத்துப் போய்டுச்சு.” பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல். வங்க மூல நாவலான ‘ஆஷானி சங்கேத்’ நூலிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்நாவலில், பஞ்சம் எடுத்த எடுப்பிலேயே நம்மைப் பதறச் செய்யும் நோக்கத்தில் செயற்கையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, எளிமையான உரையாடல்கள் மூலமும், கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரத்தைச் சொல்வது மூலமும் மெல்ல மெல்லப் பஞ்சம் அறிமுகமாகிறது. தெளிவான நீர் உள்ள குளம் ஒன்றில் மெல்ல மெல்லப் படரும் வெங்காயத் தாமரை போல. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பஞ்சத்தின் தீவிரமும் நம்மை வந்தடையும்போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பதற்றம் ஏற்படுகிறது. இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களைத் தவிர, இம்மனிதர்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும், நாம் இங்கு வாழும் வாழ்க்கையை ஒத்ததுதான். அதனால் இந்நாவலை நம் ஊரில் நிகழும் ஒரு கதை என்ற அளவில் நம்மால் எளிதாக அணுக முடிகிறது. இதை மொழிபெயர்த்திருக்கும் சேதுபதி அருணாசலம், இந்நாவல் எளிமையாகவும் அதேசமயம் ஆழமாகவும் இருக்கவேண்டும் என்பதில் காட்டி இருக்கும் தீவிரத்தை, இந்நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரக்கூடும். பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா (1894 – 1950) வங்க எழுத்தாளர். காலத்தால் அழியாப் புகழ்பெற்றவர். இவர் எழுதிய ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ’, ‘ஆரண்யக்’, ‘ஆதர்ஷ ஹிந்து ஹோட்டல்’ போன்ற நாவல்கள் உலகப் புகழ் பெற்றவை. “இந்நாவலின் அவலச்சுவை நிறைந்த சில பகுதிகளை மொழிபெயர்க்கையில் மிகுந்த மனவேதனையாக இருந்தது. மக்கள் உணவுக்காக அலைந்து கொண்டிருக்கையில், கல்கத்தாவின் கிடங்குகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் யாருக்கும் பயனில்லாமல் ஏராளமான மூட்டை அரிசிகளைப் பதுக்கி வைத்திருந்த வரலாற்று உண்மை வெளியான காலத்தின் இந்தப் பக்கத்திலிருந்து இதைப் படிக்கவே முடியவில்லை! இதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம், பிபூதிபூஷண் அப்போது நிலவியிருந்த, ‘விளைச்சல் பொய்த்ததால் உருவான பஞ்சம்’ என்ற பொது நம்பிக்கையை எங்கேயுமே நாவலில் பஞ்சம் உருவானதற்கான காரணமாகச் சொல்லாமல், போர்க் காலத்தின் காரணமாக ஏற்பட்ட பஞ்சம் என்றே மக்கள் உரையாடல் வழியே தருகிறார். அரசாங்கம் தானியங்களை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்ததும் உரையாடல்களில் குறிப்பிடப்படுகிறது.”

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.