எழுத்தாளன் காலத்தைப் பதிவு செய்கிறான். புகைப்படக் கலைஞனோ அதே காலத்தை உறைய வைக்கிறான். இருந்தாலும் இருவரும் ஒரே பாதையில் செல்லும் இரு பயணிகள்தான். எழுத்தாளனை அவன் வாழும் காலத்தில் தன் பதிவுகளின் மூலம் உறைய வைத்து அதை சமூகத்துக்குக் கொடுப்பது ஒரு புகைப்படக் கலைஞனின் கடமை. அது எப்படியென்றால், எழுத்தாளன், தான் அறிந்த ஒரு புகைப்படக் கலைஞனையோ வேறு கைவினைக் கலைஞனையோ தன் படைப்பொன்றுக்குள் காட்சிப்படுத்தி அவனை அமரத்துவம் கொண்டவனாக மாற்றுகிறான் அல்லவா... அதே மாதிரிதான்.
No product review yet. Be the first to review this product.