Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

ஒரு தேசத்திற்கான கடிதங்கள்

(0)
Price: 499.00

In Stock

Book Type
நா. வீரபாண்டியன்
SKU
ETHIR 272
ஜவஹர்லால் நேருவிடமிருந்து அவருடைய முதல் அமைச்சர்களுக்கு… 1947-1963

''மிகச்சிறப்பாக, நேர்த்தியாக ஒருங்கமைக்கப்பட்ட, திறனுடன் பதிப்பிக்கப்பட்ட ஒரு திரட்டு" - India Today

"எவ்வளவு தூரம், ஜவஹர்லால் நேருவின் தொலை நோக்குப் பார்வைக்கும் மதிநுட்பத்திற்கும் சுயக்கட்டுப்பாட்டிற்கும் பெருந்தன்மையான உணர்வுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பதற்கான உரிய நேர நினைவூட்டல்" - Outlook.

"அவருடைய மிகவும் எளிதாகப் புரியக்கூடிய இந்த தொகுப்பில், கோஸ்லா, சிற்பி நேருவை நமக்கு மறுஅறிமுகம் செய்கிறார்" - Mint

***

1947 அக்டோபரில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சரான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு நாட்டின் மாகாண அரசுகளின் தலைவர்களுக்கு அவருடைய இருவாரக் கடிதங்களின் முதல் கடிதத்தை எழுதினார்.... அவருடைய மறைவுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்வரை
அவர் பாதுகாத்த ஒரு மரபு இது.

கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தத் திரட்டு, குடியுரிமை, போரும் அமைதியும், சட்டம் ஒழுங்கு, தேசியத் திட்டமிடலும் வளர்ச்சியும், ஆட்சிமுறையும் ஊழலும் மற்றும் உலகில் இந்தியாவின் இடம் ஆகியவற்றையும் சேர்த்து, ஒரு வரையறைக்குட்பட்ட கருப்பொருள்களையும், பேசுபடு பொருள்களையும் உள்ளடக்குகிறது. இந்தக் கடிதங்கள், மிக முக்கியமான உலக நிகழ்வுகளையும், விடுதலைக்குப் பிறகு பதினாறு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்ட பல நெருக்கடிகளையும் மோதல்களையும்கூட உள்ளடக்குகின்றன.

தொலைநோக்குடைய, பாண்டித்யம் மிக்க, சிந்தனை வயப்பட்ட இந்தக் கடிதங்கள், நமது தற்கால பிரச்சினைகளுக்கும் இக்கட்டான நிலைமைகளுக்கும் அவை அளிக்கும் வழிகாட்டுதலுக்கான, மிகப்பெரும் சமகாலத்திய பொருத்தப்பாடும் கொண்டவை.


No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.