ஆத்திரத்தில் அறுத்துவிட்ட மூக்கை ஆயிரம் முறை அன்பொழுகப் பேசினாலும் ஒட்டவைக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ள நாட்டுப்புறக்கதைகள் ஏராளம். எந்தக் கதையிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் அன்றுமுதல் இன்றுவரை அன்பை முறித்தபடியும், பற்றிய கையை உதறியபடியும், ஒன்றுபட்டு இனிதாகக் கழித்த கடந்தகால நினைவுகளையெல்லாம் கணநேரத்தில் சீயென்று வெறுத்தொதுக்கி மறந்தபடியும் ஏராளமானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியபடியே இருக்கிறார்கள். வீட்டைவிட்டு வெளியேறுவது எளிது. ஆனால் அதே வீட்டுக்கு திரும்பி வருவது எளிதல்ல. கிருஷ்ணமூர்த்தியின் பாகன் நாவலை நான் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன்.
No product review yet. Be the first to review this product.