‘அதோ அங்கே தெரிகிறதே ஒரு கடை, அங்கே போய் காத்திருக்க சொன்னார்.’ என்று கூறி இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றார். அது ஒரு தாய்லாந்து சாப்பாட்டு கடை. சதூன் தாய்லாந்து நாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும், அங்கே வாழும் பெருபான்மையான மக்கள் மலாய் இன மக்களாகவும், அவர்கள் பேசும் மொழி மலாய் மொழியாக இருந்தது.
சப்பாட்டு கடைக்குள் நுழைந்தவர்கள் ஒரு மேஜையில் போய் அமர்ந்தார்கள். அவர்கள் அமர்ந்த மேஜைக்கு இரண்டு மேஜை தள்ளி சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருத்தர் அமர்ந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்த பாட்டி கடைக்கு வந்து இவர்களோடு அமர்ந்தார்.
‘உங்களுக்கு பின்னால் ஒருவர் அமர்ந்திருக்கிறாரே, அவர் யார் தெரியுமா?’ என்று கேட்டார். மூவரும் திரும்பி பார்த்தார்கள்.
‘அவர்தான் நீங்கள் தேடிக் கொண்டு வந்திருக்கும் தோக் குரு. மாக் யோங் லவுட் நடனத்தின் கடைசி தோக் குரு. நீங்கள் அவரை தேடிக் கொண்டு வருவீர்கள் என்று சொன்னார். உங்களுக்காகவே அவர் காத்திருக்கிறார்.’ என்றதும் பெரியமீசைக்கும் முரளிக்கும் ஒரே ஆச்சர்யம். போமோகாரருக்கு இது ஒன்றும் பெரிய ஆச்சர்யமான விசயமாக இல்லை. இது போன்ற ஆயிரம் கதைகள் அவருக்கு தெரியும். இது ஒரு டெலிபதி தொடர்பு வகையை சேர்ந்தது. டெலிபோன்களோ அல்லது வேறு பிற விஞ்ஞான தொடர்பு சாதனங்களோ தேவை இல்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய செய்தி வந்து கிடைத்துவிடும்.
‘நாங்கள் வருவது அவருக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்?’ என்று முரளி கேள்வி கேட்டு முடிப்பதற்குள், தோக் குரு தன் மேஜையிலிருந்து எழுந்து இவர்கள் பக்கம் வந்து ‘கிளம்பலாமா?’ என்று மலாய் மொழியில் கேட்டார். அவர் தோளில் ஒரு பேக் மாட்டியிருந்தார். தயராகவே வந்திருந்தார். நேநேக்கிடம் விடைபெற்றுக் கொண்டு நால்வரும் கிளம்பி போர்டர் வந்தார்கள்.
No product review yet. Be the first to review this product.