போலி, தமிழ்த் திரையில் ஒரு ஸ்டண்ட் நடிகன். மூச்சுவிடுவதற்கு அடுத்தபடியாக சண்டைக்கலைப் பயிற்சிகளைச் செய்பவன். ஆபத்தான சண்டைக்காட்சிகளில் ‘டூப்’ போடும் அவன், முன்னணிக் கதாநாயகர்களுடன் ஒரு முறையேனும் சண்டைக்காட்சியில் முகம் காட்டுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தான். மகன் சண்டைக்கலையில் தினமும் விபத்துடன் விளையாடுவது தந்தைக்குப் பிடிக்கவில்லை. தமிழ்த் திரையின் சண்டைக்காட்சிகளில் உயிருடன் விளையாடுவதும், வீட்டில் தந்தையின் மனச்சாய்வுகளுடன் விளையாடுவதும் அவனுக்கு வாடிக்கையானது. விதியும் அதன் பங்கிற்கு தான் விரும்பிய பக்கத்தில் அவனைத் தள்ளிவிட்டு வெற்றியென எதையோ அவனுக்குப் போலியாகக் காட்டியது. போலியோடு நம்மையும் தமிழ்த் திரைக்குள் அழைத்துச் செல்லும் நாவல்.
No product review yet. Be the first to review this product.