நீதி மன்றத்தில் தமிழில் வாதிட குரல் எழுப்பிய முதல் தமிழன் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. இவர் எழுதிய ”பிரதாப முதலியார் சரித்திரம்” என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து 'சித்தாந்த சங்கிரகம்' என்ற நூலாக 1862ல் வெளிட்டார். மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை அவர்கள் என்று சொல்லலாம். 1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார்.
No product review yet. Be the first to review this product.