நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான மனித அனுபவத்தின் முழுமை... வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக் கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின் முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை தெரியலாம். ஆனால், அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக் கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின் முழுமையை தைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான் ‘செல்லாத பணத்’தின் சிறப்பு.னையின் மெய்வருத்தம் அனுபவத்தின் முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான் ‘செல்லாத பணத்தின்’ சிறப்பு.”
No product review yet. Be the first to review this product.