தோழர் ஜி .காசிராஜனின் கதை உலகம் எப்போதும் அனலடிக்கும் கரிசல் மண்ணில் வேர்கொண்டது. முதலில் சிறுகதைகள் மூலம் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்த அவரது இந்த நாவல் முற்றிலும் கரிசல் வாழ்க்கையில் நிலைகொண்டு இயங்குகிறது.மிகவும் முக்கியமாக கரிசல்காட்டின் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த மானுட வாழ்வைப் பேசுவது இந்த நாவலின் தனித்துவமாகும். 25 ஆண்டுகளுக்கு முன்னால் “கொக்குகள் பறந்து போய்விட்டன” என்கிற சிறுகதைத்தொகுப்பில் காணாமல் போன கரிசல் கொக்குகளுக்காக ஏங்கிய காசிராஜன் இந்த நாவலை கொக்குகள் கரிசல் கண்மாய்களில் நிறைந்து பறந்துகொண்டிருந்த அந்த நாட்களிலிருந்து துவங்குகிறார். குணா என்கிற சிறுவனின் பள்ளி வாழ்க்கையை அச்சாகக் கொண்டே நாவல் சுழலத்துவங்குகிறது. ஒரு கொக்கைக் குறி பார்த்துக் கல்லால் அடிக்கும் குணா, சாந்தா டீச்சரின் கிள்ளுகளை நினைத்துக் கோபப்படுகிறான். நீ கொக்கை அடித்தால் டீச்சர் உன்னை அடிக்கப்போறாங்க என்பதுபோலப் பின்னிப் போகிறது கதை.
No product review yet. Be the first to review this product.