ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை
சில பரிசோதனை முயற்சிகளை துணிச்சலாக ஆசிரியர் மேற்கொண்டு இருக்கிறார். அதுவே இப்புனைவின் பலமாகவும் பலவீனமாகவும் வாசகர்களால் கருதப்படலாம். நாவலின் ஒட்டுமொத்த உணர்வுக்கடத்தல் இதுதான் என்பதை சொல்லிவிடலாம்தான். ஆனால், அதற்குள்தான் நுண்ணிய சூட்சுமமாக வாசிப்பனுபவம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. நூல் விமரிசகர்கள் நாவலின் நிழலைக்கூட மேற்கோள் காட்டிவிடக்கூடாதபடிக்கு முன்னெச்சரிக்கையுடன் 'சுழியம்' வடிமைக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். முழுமையாக படித்து முடித்ததும் நீர்மமான வெற்றிடம் மனதுக்குள் மண்டுகிறது....பாருங்கள், அங்கேதான் நூலாசிரியரின் ஒட்டுமொத்த உழைப்பும் வெற்றியும் மலைதீபமாக ஒளிர் விடுகிறது. 'சுழியம்' என்பதன் பொருள், இதுவோ... அதுவோ.... எதுவோ... என்பதாக அடுக்கடுக்காக நமக்குள் சுழித்தோடுகிறது. புனைவுகளில் பரிசோதனை முயற்சிகளை எப்போதும் புறம்தள்ளவும் வாரியணைக்கவும் காத்திருக்கும் இலக்கியவெளியில் சலசலப்பை இந்நாவல் உருவாக்கும் என்பது உறுதி.
No product review yet. Be the first to review this product.