ஒன்றுபட்ட சென்னை மாகாணத்திலிருந்து தமிழ்நாடு எனும் மாநிலம் உருவான வரலாற்றை நேர்த்தியாக எடுத்துரைப்பதோடு, இந்தியா முழுவதும் மொழிவழி மாநிலப் பிரிவினை கோரி நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் வரலாற்றை, எந்த விதச் சார்பும் இன்றிச் சுருக்கமாகச் சொல்கிறது இந்த நூல்.
ராஜாஜி, காமராஜர், ம.பொ.சி, மார்ஷல் நேசமணி எனப் பல்வேறு தலைவர்கள் தமிழ்நாடு தனி மாநிலமாக உருப்பெறச் செய்த பங்களிப்புகள், அதற்கு ஏற்பட்ட இடையூறுகள், இறுதியில் கிடைத்த தீர்வுகள் எனப் பல்வேறு விஷயங்களையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
தமிழர்களுக்கெனத் தனி மாநிலம் கேட்டு உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் போராட்டத்தைச் சொல்லும் அதேநேரம், ‘விசால ஆந்திரா’ கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த பொட்டி ஸ்ரீராமுலுவின் தியாகத்தையும் பதிவு செய்கிறார் ஆசிரியர்.
இந்தியா முழுவதும் எழுந்த மொழிவழி மாநிலக் கோரிக்கைகளை ஜவாஹர்லால் நேருவும் அவரது சகாக்களும் எங்கனம் அணுகினர் என்பதையும், மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த சில தலைவர்கள் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது, தங்களது மாநிலங்களுக்குச் சார்பாக எங்கனம் இருந்தனர் என்பதையும் இப்புத்தகம் விவரிக்கிறது.
தனி மாநிலம் குறித்து ஆழமாகவும் ஆதாரபூர்வமாகவும் தமிழில் வெளிவந்த வெகுசில நூல்களில் இதுவும் ஒன்று.
No product review yet. Be the first to review this product.