இருவழிச்சாலை நான்காகி, ஆறாகி, பின் அதிநவீனச் சாலையாக மாறும்போது மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களே மு. குலசேகரனின் ‘தங்கநகைப் பாதை’ நாவலின் மையம். அசாதாரணமான மனிதர்கள், நம்ப முடியாத நிகழ்வுகள், சாத்தியமற்ற செயல்கள் ஆகியவற்றால் நிரம்பியது இந்த நாவல். கற்பனை விதைப்பு, பொம்மைக் காவல், மிகை அறுவடை, பேய் உழைப்பு, தோல் குவியல் போன்றவை அதீதப் புனைவுச் சித்திரங்களாக உருப்பெறுகின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பாத்திரத்தின் மூலம் வெளிப்படுவது நாவலுக்குப் பன்முகப் பார்வையைத் தருகிறது. நெடுஞ்சாலை விபத்தில் கணவனை இழந்திருந்த பேச்சிக்கிழவி “அழிவுக்காலம் ஆரம்பமாயிருச்சி” என்கிறார். இந்த வாக்கு உக்கிரம் பெற்று நாவலை வளர்த்துச் செல்கிறது. எளிமையானதாகத் தோற்றமளிக்கும் குலசேகரனின் தெளிந்த கவித்துவ மொழி நுணுக்கமும் உருவகத்தன்மையும் கூர்மையும் கொண்டது. நவீன வாழ்வின் மறுபக்கம் குறித்த புனைவுகளில் முக்கியமான இடம்பெறத் தக்க நாவல் இது.
No product review yet. Be the first to review this product.