2008 முதல் ட்விட்டரிலும் 2015 முதல் ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து எழுதி வரும் பா. ராகவன், வாழ்வின் சர்வேயராக இருப்பதற்கு 140 எழுத்துகள் போதும் என்கிறார். ஆகக் குறைவான சொற்களில் ஓர் அனுபவத்தை ரசனையுடன் முன்வைக்கும் பயிற்சிக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பாரா அங்கே இதுவரை எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த சிறந்த குறுவரிகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கலை, இலக்கியம், அரசியல், சினிமா, சமையல், கிரிக்கெட், பெண்கள், பெண்களையும் உள்ளடக்கிய சமூகம், எழுத்து, புத்தகம், இசை, வசை, விருதுகள் என்று இத்தொகுப்பில் பாரா தொட்டிருக்கும் துறைகள் பல. ஆனால் அவை அனைத்துக்குமான பொதுச் சரடு ஒன்று உள்ளது. நகைச்சுவை. அதி உக்கிர அறச் சீற்றப் பேட்டையான சமூக ஊடகங்களில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் 'மேலாக ஒரு தனித் தாரகையாக அவர் நிலைத்திருப்பதன் காரணம் அதுதான்.
No product review yet. Be the first to review this product.