பிரபல சோவியத் உயிரியல் விஞ்ஞானியான ஏ.ஐ. ஓபாரின் எழுதிய உயிரின் தோற்றம் என்ற இந்த நூல் உலகப் புகழ் பெற்றதாகும். மனித அறிவு தோன்றிய காலம் முதல் பூமியும், இயற்கையும் உயரும், உயிரினங்களும் தோன்றிய விதம் பற்றி நீண்ட காலமாக எதிரும் புதிருமான சர்ச்சைகள் தொடர்ந்தன. அனைத்தும் கடவுளின் படைப்பு என்று மதங்களும், இயற்கையின் பரிணாம வளர்ச்சி என்று விஞ்ஞானிகளும் வாதிட்டு வந்தனர். கலிலியோ, புரூனோ, கோபர்நிகஸ் போன்ற விஞ்ஞானி களின் கிரகங்கள், பூமியின் தோற்றம் பற்றிய கண்டுபிடிப்புகளால் மூடநம்பிக்கைகள் கல்லறைக்கு அனுப்பப்பட்டன. விஞ்ஞானி சார்லஸ்டார்வின் எழுதிய 'உயிரினங்களின் தோற்றம்' குறித்த கண்டுபிடிப்புகள் கடவுளைக் களத்திலிருந்து விரட்டியடித்தது. பரிணாம வளர்ச்சித் தத்துவப்படி குரங்கு - மனிதக் குரங்கு அரை மனிதன் - முழுமனிதன் உருவான விதம் பற்றிய டார்வினின் கருத்துகள் பழைய கருத்தோட்டங்களை விரட்டியடித்தன. டார்வினுக்குப் பிறகு விஞ்ஞானம் பெரும் வளர்ச்சியடைந்தது. தொலை நோக்கிகள், நுண்ணுயிர் நோக்கிகள் போன்ற கருவிகளின் துணை கொண்டு விஞ்ஞானிகள் உயிரின் தோற்றம் குறித்து தெளிவான முடிவுகளுக்கு வந்தனர். உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர் தோன்றியது என்பதையும் நிரூபித்தனர். இந்நூலில் டாக்டர் ஓபாரின் உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர்ப் பொருள் பரிணமிப்பதை தெளிவாக, படிப்படியாக விளக்கியுள்ளார்..
No product review yet. Be the first to review this product.